For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14 தொகுதி பட்டியலை திருப்பி அனுப்பிய தேமுதிக.. விரக்தியில் பாஜக.. முறிகிறது கூட்டணி?

By Mathi
|

சென்னை: தேமுதிகவுக்கு பாரதிய ஜனதா கட்சி அனுப்பி வைத்த 14 உத்தேச தொகுதிகள் அடங்கிய பட்டியல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக மீது பாஜக கடும் அதிருப்தியில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் 16 தொகுதிகளைக் கேட்டது தேமுதிக. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 14 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது.

ஆனால் தேமுதிக கேட்கும் 14 தொகுதிகளில் பெரும்பாலானவை பாமக போட்டியிடுவதாக அறிவித்த 10 தொகுதிகளில்தான் இருந்தன. இதனால் பாமக கடுப்படித்தது.

உத்தேச பட்டியல்

உத்தேச பட்டியல்

இதனால் பாஜக அணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த முட்டுக்கட்டையை போக்கும் வகையில் பாஜகவே 14 தொகுதிகள் கொண்ட ஒரு உத்தேச பட்டியலை தேமுதிகவுக்கு அனுப்பியும் வைத்தது.

பிடிவாத பாமக

பிடிவாத பாமக

ஆனால் தேமுதிகவோ, பாஜக அனுப்பி வைத்த பட்டியலை ஏற்க முடியாது என நிராகரித்து அதை திருப்பி அனுப்பி வைத்துவிட்டது. ஏற்கெனவே 10 தொகுதிகள் தந்தால் மட்டுமே கூட்டணிக்கு வருவோம் என்று பாமக பிடிவாதம் பிடிக்கிறது.

14 விரும்பும் தொகுதி- தேமுதிக

14 விரும்பும் தொகுதி- தேமுதிக

இந்த நிலையில் விரும்பும் 14 தொகுதிகள்தான் வேண்டும் என்று தேமுதிக அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாஜக தலைவர்கள் நொந்து போயுள்ளனர். இந்த இடியாப்ப சிக்கல் நீடித்தால் பாஜக கூட்டணி உருவான வேகத்தில் முறிவை சந்திக்க வேண்டிய நிலைதான் வரும் என்றும் கூறப்படுகிறது.

நெருக்கடியில் தமிழக பாஜக

நெருக்கடியில் தமிழக பாஜக

அத்துடன் டெல்லியில் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை தமிழக தலைவர்கள் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றனர். இதனால் தமிழக பாஜக தலைவர்கள் கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

English summary
Even as the seat-sharing talks between the BJP and the DMDK continued, the hitch over numbers and identification of seats remained unresolved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X