For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி குடும்பத்திற்கு தமிழிசை ஆறுதல் - சட்டம் ஓழுங்கை கண்டித்து நாளை ஆர்பாட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கொலைச் சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வீட்டிற்கு சென்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டதாக தெரிவித்தார். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தமிழிசை கூறினார்.

BJP to Hold Protests in Chennai

கூலிப்படை களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அவர்களை ஒடுக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் ஐடி ஊழியர் சுவாதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. கொலை செய்தவரை கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதை கண் டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், கட்சி சார்பின்றி அனைத்து அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

English summary
BJP announced protest tomorrow against tamilnadu law and order issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X