For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முட்டி போட்டு ஆட்சியை பிடித்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - சிஆர் சரஸ்வதி பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    முட்டிப்போட்டு ஆட்சிப் பிடித்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - சிஆர் சரஸ்வதி பேட்டி- வீடியோ

    ஓசூர்: முட்டிப்போட்டு ஆட்சிப் பிடித்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மேற்கு மாவட்ட அமமுக சார்பில் நடைபெற்ற உள்ள அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

    எடப்பாடி அரசு

    எடப்பாடி அரசு

    அவர் பேசியதாவது: மத்திய பாஜகவின் தயவால் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி தாக்குபிடித்து நடந்து வருகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தீர்ப்பு வெளியானதும் ஆட்சி கவிழும்.

    [பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது- முதல்வர் எடப்பாடி]

    பெருமை

    பெருமை

    தவறு செய்த மாணவர்கள் தண்டனையாக முட்டி போடுவது போல்,
    சசிகலாவிடம் முட்டியிட்டு முதல்வரான ஒரே முதல்வர் என்கிற பெருமை எடப்பாடிக்கே சொந்தம்.

    அம்மா ஆட்சி

    அம்மா ஆட்சி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட, அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் படிப்படியாக கைவிட்டு வருகின்றனர். ஆனாலும் அம்மா ஆட்சி நடைபெறுவதாக நாகூசாமல் பேசி வருகின்றனர்.

    கைது செய்யாமல்

    கைது செய்யாமல்

    கருணாஸ் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக மன்னிப்பு தெரிவித்த பிறகும் கைது செய்தனர். ஆனால் பத்திரிகை துறையில் உள்ள பெண்களை இழிவாகவும், காவல்துறையினரை கடுமையாகவும் பேசிய பாஜகவினரை கைது செய்யாமல் இருப்பது ஏன். திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக குக்கர் சின்னத்தில் அமோக வெற்றி பெறும் என்றார் சி.ஆர்.சரஸ்வதி.

    English summary
    AMMK Spokesperson C.R. Saraswathi says that a CM who gets that position by knee down is only Edappadi Palanisamy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X