எச்சை, எச்சக்கலை, பொறம்போக்கு.. "நாகரீக" பிரபலங்கள்.. வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கெட்ட வார்த்தை பேசாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். என்றாலும் பொது இடங்களில் என்று வரும் போது சாதாரண மனிதர்கள் கூட அசிங்கமான வார்த்தைகளைப் பேசத் தயங்குவார்கள். பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி பேசாமல் இருப்பதுதான் பொது பண்பாடு, பொது நாகரிகமாகும்.

பொது பண்பாடு இப்படி இருக்க தமிழ்நாட்டில் சமீபகாலமாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலர் எச்சக்கல, எச்ச என பேசி பொது வெளியை நாஸ்தி செய்து வருகின்றனர்.

அதற்கு சிறந்த உதாரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது நண்பர் ராஜா, நடிகை காயத்ரி ஆகியோரை சொல்லலாம்.

எச்சக்கல தீபா

எச்சக்கல தீபா

கடந்த 11ம் தேதி திடீரென ஜெயலலிதா வீட்டிற்கு தீபா சென்றார். இதனால் போயஸ்கார்டனில் பதற்றம் ஏற்பட்டது. பரபரவென போலீசார் குவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் செய்தி சேகரிக்க குவிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கூடியிருந்தனர்.

நாறிப் போன போயஸ் கார்டன்

நாறிப் போன போயஸ் கார்டன்

அந்த நேரத்தில் தீபா பேசியது பேச்சாங்க. அப்பா.. காதுல கேட்க முடியல.. அவ்வளவு அசிங்கம். "தீபக் சசிகலாவின் ஆள். அவன்தான் என்னை வரவச்சான். அம்மாவை சசிகலாவோடு, தீபக்கும் சேர்ந்துதான் கொன்றுவிட்டான். பொறம்போக்கு... சொந்த அத்தையை, பெத்த தாய் மாதிரி இருந்தவங்களை கொன்னுட்டான். பணத்துக்காக தீபக் இதை செஞ்சிட்டான்... போடா எச்சக்கல.." இதுதான் ஒரு பெரிய குடும்பத்து பெண்ணின் தரம் தாழ்ந்த பேச்சு. இவ்வளவு பேர் கூடி இருக்க, பல தொலைக்காட்சிகள் லைவ் ரிலே செய்ய உலகமே பார்க்குமே என்ற இந்த உணர்வும் இல்லாமல் பேசினார் தீபாவை நினைத்தால் உடம்பெல்லாம் புல்லரிக்குது.

"ஆத்தா"வைத் திட்டிய ராஜா

அந்தக் களேபரத்தில் தீபாவின் கார் டிரைவர் ராஜா, மாதவனைப் பார்த்து மிகக் கேவலமாக தாயை இழிவுபடுத்தி அசிங்கமாக பேசினார். ஜெயலலிதாவின் மருமகன் நான் என்று சொல்லிக் கொள்ளும் மாதவனும், தாயை இழிவுபடுத்திய ராஜாவை ஒன்றும் கேட்கவில்லை. பொது இடத்தில் ஜெயலலிதாவின் குடும்பத்தினர் இவ்வளவு அசிங்கமாக பேசியதும் நடந்து கொண்டதும் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.

‘எச்ச’காயத்ரி

‘எச்ச’காயத்ரி

இதே போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை காயத்திரி, "இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன்" என்று ரொம்ப டீசன்டா பேசி இருக்கிறார். இவங்கல்லாம் ஒரு நடிகைன்னு சொல்லிக்கிட்டு வெளியில வேற வராங்க. இது மாதிரி பேசினா என்ன பதில் திரும்ப வரும் என்று நடிகை காயத்ரிய ராயப்பேட்டை செல்லம்மா தோட்டத்துல வந்து பேசிப் பார்க்க சொல்லுங்க..

‘அழுகின தக்காளி’ராஜேந்திர பாலாஜி

‘அழுகின தக்காளி’ராஜேந்திர பாலாஜி

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஜேந்திரபாலாஜி அழுகின தக்காளி.. சாப்பிடவும் உதவாது.. சாம்பாருக்கும் உதவாது.. சீக்கு புடிச்ச பிராய்லர் என தன் சொந்தக் கட்சிக்காரரான வைகை செல்வனை தாக்கி பேசினார். ஒரு அமைச்சர் பொது இடத்தில் எப்படி பேச வேண்டும் என்றில்லையா? அரசியல், சினிமா என எந்த பிரபலமானாலும் பொது வெளியில் எப்படி பேசக் கூடாது எதைப் பேசக் கூடாது என்று பயிற்சி எடுத்தால் நல்லாம் இருக்கும் போல.. வாழ்க தமிழ்! வளர்க் தமிழ் நாடு!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Celebrities, who are in Cinema and politics speak filthy language in public place.
Please Wait while comments are loading...