Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவியின் உடலை பெற்று கொள்ள பெற்றோர் சம்மதம்.. நாளைக்குள் இறுதிச் சடங்கு.. நீதிபதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளைக்குள் பெற்றுக் கொள்கிறோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாளை மாலை 6 மணிக்குள் மாணவியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் என நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    Kallakurichi மாணவி உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு *TamilNadu

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்தார். இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராயவு நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    உயர்நீதிமன்றம்

    உயர்நீதிமன்றம்

    இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்ததை அடுத்து அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது முறையீடு செய்தார்.

    மறுஉடற்கூராய்வு

    மறுஉடற்கூராய்வு

    மறுஉடற்கூராய்வு செய்யப்பட்ட போதிலும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுக்கிறார்கள். உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையை வைத்ததுடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார். அவரது முறையீட்டை ஏற்று நீதிபதி நேற்று பிற்பகல் இந்த வழக்கை விசாரித்தார்.

    நடைமுறைகள்

    நடைமுறைகள்

    அப்போது அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே மாணவியின் உடல் மறுஉடற்கூராய்வு செய்யப்பட்ட போதிலும் அவரது உடலை பெற்றோர் வாங்க மறுக்கிறார்கள் என்றும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டது என அரசு தரப்பு தெரிவித்தது. அப்போது மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

    உச்சநீதிமன்றம்

    உச்சநீதிமன்றம்

    தங்கள் தரப்பு மருத்துவர்களை கொண்டு மறுபிரேத பரிசோதனை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டுள்ளதையும் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய போவதில்லை என கூறி இன்று காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    உயர்நீதிமன்ற நீதிபதி

    உயர்நீதிமன்ற நீதிபதி

    இன்று காலை இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோருக்கு நீதிபதி காட்டமான கேள்விகளை எழுப்பினார். நீதிபதி கூறுகையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுப்பது ஏன், பெற்றோர் மீது இந்த நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. ஆனால் மாணவியின் உடல் மீது பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என காட்டமாக பேசினார். இதையடுத்து பெற்றோர் தரப்பு, தங்களுக்கு மறுஉடற்கூராய்வில் திருப்தி இல்லை. இரு உடற்கூராய்வு வீடியோக்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    உடற்கூராய்வு அறிக்கை

    உடற்கூராய்வு அறிக்கை

    இதையடுத்து நீதிபதி கூறுகையில் இரு உடற்கூராய்வு அறிக்கைகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறேன். கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள். உங்கள் மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சமூகவலைதளங்கள் பொய் செய்தியை பரப்பியுள்ளன. நாளைக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

     சட்டபடி நடவடிக்கை

    சட்டபடி நடவடிக்கை

    இல்லாவிட்டால் காவல் துறை சட்டபடி நடவடிக்கை எடுக்கும். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களிந் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். உடலை பெற்றுக் கொள்வது குறித்து பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கேட்டு ஒரு முடிவை சொல்லுங்கள் என நீதிபதி, பெற்றோர் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.

    உடலை வாங்க சம்மதம்

    உடலை வாங்க சம்மதம்

    இதையடுத்து மகளின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்போது நீதிபதி சதீஷ்குமார் நாளை காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்று கொள்ள வேண்டும். நாளை மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என கூறிய நீதிபதி இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+