For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1918ம் ஆண்டு சாதனையை முறியடிப்பை மயிரிழையில் தவறவிட்ட சென்னை மழை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: நூற்றாண்டில் கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் சென்னையில் அதிகபட்ச மழை பெய்துள்ளது.

சென்னையில் நவம்பர் மாதம் பிறந்ததில் இருந்து மழையாக உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒவ்வொன்றாக ஏற்படுவதால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்கனவே பெய்த மழையில் சென்னை நகரம் தத்தளித்தது.

அந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் முன்பு தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

நவம்பர்

நவம்பர்

சென்னையை இந்த மழை படாதபாடு படுத்துகிறதே என்று மக்கள் கவலையில் உள்ளனர். கடந்த மாதம் மட்டும் சென்னையில் 1049.3 மிமீ மழை பெய்துள்ளது.

1918ம் ஆண்டு

முன்னதாக கடந்த 1918ம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 1088.4 மிமீ மழை பெய்தது. நூற்றாண்டில் சென்னையில் அதிகம் மழை பெய்த மாதம் 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் தான்.

சாதனை

நூற்றாண்டில் அதிகம் மழை பெய்த நவம்பர் மாத சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளது தற்போது பெய்த மழை. (முறியடித்திருந்தால் நாங்கள் என்னாவது என்று சென்னைவாசிகள் கூறுவது கேட்கிறது).

வருண பகவானே

வருண பகவானே, கொடுத்தால் ஒரேயடியாக மழையை கொடுக்கிறீர்களே, எங்களால் தாங்க முடியவில்லை என்று சென்னைவாசிகள் புலம்பி வருகிறார்கள்.

English summary
Chennai rains has missed to create a new record of the wettest month of the century by a whisker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X