தினகரன் திவாகரன் மோதல் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.. சொல்கிறார் சசிகலா உறவினர் பாஸ்கரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரன்-திவாகரன் சண்டை பற்றி தினகரனின் தம்பி பாஸ்கரன் பேட்டி-வீடியோ

  பொள்ளாச்சி: தினகரன் திவாகரன் மோதல் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது என சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

  சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தினகரனுடனான மோதலால் தனிக்கட்சியையும் அதற்கான அலுவலகத்தையும் மன்னார்குடியில் தொடங்கினார் திவாகரன்.

  இதனை சற்றும் விரும்பாத சசிகலா தனது போட்டோவையும் பெயரையும் திவாகரன் பயன்படுத்தக்கூடாது என வக்கில் நோட்டிஸ் அனுப்பினார். இதனால் சசிகலா குடும்பத்தில் மோதல் முற்றியுள்ளது அம்பலமானது.

  நலத்திட்ட உதவிகள்

  நலத்திட்ட உதவிகள்

  இந்நிலையில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் சசிகலாவின் உறவினரும் டிடிவி தினகரனின் சகோதரருமான பாஸ்கரன் ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

  பணத்தை வைத்து அரசியல்

  பணத்தை வைத்து அரசியல்

  பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, தற்போது தூய்மையான அரசியல் இல்லை. பணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

  உறவு வேறு, கொள்கை வேறு

  உறவு வேறு, கொள்கை வேறு

  சுயநலத்தை எண்ணி அரசியல் செய்வதால் போட்டி பொறாமை ஏற்படுகிறது. தினகரன் அண்ணன் திவாகரன் மாமா உறவு வேறு. கொள்கை வேறு. கொள்கை என்று வரும் போது எம் ஜி ஆர் வழியில் பயணிப்பேன்.

  மோதல் வேடிக்கையாக உள்ளது

  மோதல் வேடிக்கையாக உள்ளது

  தினகரன் திவாகரன் மோதல் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. பொது வாழ்வில் எம்ஜிஆரை போல் தூய்மையான அரசியலில் ஈடுபடுவேன்.

  எந்த குற்றச்சாட்டும் இல்லை

  எந்த குற்றச்சாட்டும் இல்லை

  மோடி தற்போது நல்லாட்சி செய்கிறார் அவர் இந்தியா வல்லரசாக நினைக்கிறார் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.

  காவிரி பிரச்சனை

  காவிரி பிரச்சனை

  காவிரி பிரச்சனை 20 ஆண்டுகளாக உள்ளது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தீர்க்கவில்லை. தற்போது மத்திய அரசு மீது குறை சொல்ல வேண்டும் என்றே பிரதமரை குறை கூறுகிறார்கள் அவரது திட்டங்கள் கஷ்டத்தை தந்தாலும் பிற்காலத்தில் நல்ல முன்னேற்றம் வரும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sasikala's relative Baskaran said that Dinakaran's Divakaran conflict is fun. Prime Minister Modi is doing good rulling.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற