நெடுவாசல், முத்துக்கிருஷ்ணன் மரணம், குடிநீர் பிரச்சனை: சட்டசபையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நெடுவாசல், டெல்லி ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பு, ரூபெல்லா தடுப்பூசி, குடிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக திமுக சார்பில் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை குறித்து 2 நாளில் தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்ததுள்ளார்.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின் தமிழக சட்டசபையின் பொது விவாத கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் போராட்டம், டெல்லி ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பு, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

DMK passed a resolution on Neduvasal protest, JNU student Muthukrishnan death, water problem

கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை குறித்து 2 நாளில் தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

முன்னதாக திமுக கொண்டுவந்த ரூபெல்லா தடுப்பூசி குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது ரூபெல்லா தடுப்பூசி குறித்து பரவும் வதந்திகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK passed a resolution on Neduvasal protest, JNU student Muthukrishnan death, water problem. DMK passed resolution on Rubella vaccine also.
Please Wait while comments are loading...