For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரான், ஆப்கான், வட இந்தியா, தென்னிந்தியாவில் இன்றும் பேசப்படும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள்!!

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா தமிழ் பேசிய நாகர்கள் தேசம்தான்

    சென்னை: இந்திய துணைக்கண்டம் ஆதித் தமிழர்களான நாகர்களின் தேசம் என்பவை நிறுவும் வகையில் ஈரான் தொடங்கி இந்திய நிலப்பரப்பு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட தமிழை தாய்மொழியாகக் கொண்ட திராவிட மொழிகள் இன்றும் உயிர்ப்புடன் பல கோடி மக்களால் பேசப்பட்டு வருகின்றன.

    திராவிட மொழிகள் தொடர்பாக தமிழக அரசின் இணையப் பல்கலைக் கழக பாட நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளின் சுருக்கம்:

    தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா, தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய ஒன்பது மொழிகளும் தென் திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன. தெலுங்கு தென் திராவிட மொழி பிரிவில் இடம்பெறவில்லை.

    நடுத் திராவிட மொழிகள்

    நடுத் திராவிட மொழிகள்

    தெலுங்கு மொழி நடுத் திராவிட மொழிகளுடன் சேர்க்கப்படுகிறது. அவ்வகையில் நடுத் திராவிட மொழிகளை, தெலுங்கு - குவி கிளை நடுத் திராவிட மொழிகள்; கொலாமி - நாய்க்கி கிளை நடுத் திராவிட மொழிகள் என பிரிக்கப்படுகின்றன.

    தெலுங்கு-குவி கிளையில் தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய மொழிகள் உள்ளன. கொலாமி - நாய்க்கி கிளையில் பர்ஜி, கட்பா ஒல்லாரி, கட்பா சில்லூர் ஆகிய மொழிகள் உள்ளன.

    ஆந்திரா, ஒடிஷா பழங்குடிகள்

    ஆந்திரா, ஒடிஷா பழங்குடிகள்

    இவைகள் ஆந்திரா, ஒடிஷா, மத்தியபிரதேசம் மாநிலங்களில் பேசப்படுகின்றன. ஒடிஷா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் பழங்குடிகள்தான் இம்மொழிகளை அதிகம் பேசுகின்றனர். தண்டேவடா, கோண்டுவானா மலைகளிலும் காடுகளிலும் ஆதித் தமிழர்கள் இன்றும் பழங்குடிகளாகவே வாழ்கின்றனர்.

    வட திராவிட மொழிகள்

    வட திராவிட மொழிகள்

    வட திராவிட மொழிகளில் பிராகுயி, மால்டோ, குரூக் ஆகிய மூன்று மொழிகள் அடங்கும். ஆந்திராவில் வழங்கும் கோயா மொழியைத் தனி மொழி என்று கண்டுபிடித்து அதையும் வட திராவிட மொழியுடன் சேர்த்துள்ளனர்.

    பேசும் இடங்கள்

    பேசும் இடங்கள்

    இதில் ஈரான், ஆப்கான், பலுசிஸ்தானில் பிராகுயி மொழி பேசப்படுகிறது. பீகார், மேற்குவங்கத்தில் மால்டாவும் அசாம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் குரூக் மொழியும் பேசப்படுகிறது. இவ்வாறு தமிழ் இணையப் பல்கலைக் கழக பாடநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆதிகுடிகளாக, சிறுபான்மையினராக

    ஆதிகுடிகளாக, சிறுபான்மையினராக

    ஆம், இந்திய நிலப்பரப்பில் மட்டுமின்றி அதற்கு அப்பாலும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட 70-க்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. ஆதித் தமிழர்களான நாகர்களே இன்று தமிழர்களாக, தெலுங்கர்களாக, கன்னடர்களாக, கோண்டுகளாக..என பல்வேறு இனங்களாக இனம்- மொழி கலப்பால் வாழ்ந்து வருகின்றனர் என்பது வரலாறு. இதில் தென்னிந்தியாவைத் தவிர வட இந்தியாவில் திராவிட மொழிக் குடும்பத்தினர் மலைகளில் வாழும் ஆதிகுடிகளாக, சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Here the list of Dravidian languages in indian subcontinent.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X