ஈபிஎஸ் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு- தினகரன் எம்எல்ஏக்கள் கோரிக்கை நிராகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, இப்தார் நோன்பு திறப்பு ஆகியவை டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்று நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.

EPS hosts ADMK's iftar party on June 21

கட்சி நிகழ்ச்சிகளில் தினகரனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் கோரிக்கையாகும். ஆனால் அந்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார்.

ஜூன் 21ஆம் தேதி அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu chief minister Edapadi Palanisamy has arranged for an iftar party in Chennai on June 21,2017.
Please Wait while comments are loading...