For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாது மணல் கொள்ளைக்கு ஆதரவாக பேசியவர் விஷம் ஊற்றிக் படுகொலை! தூத்துக்குடியில் பதற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தாது மணல் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த குரூஸ் பர்னாந்தீஸ் பேரவை தலைவர் ஜோசப் பர்னாந்து விஷம் ஊற்றி கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி நகரத்தில் தாதுமணல் கொள்ளைக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும்...எதிராக ஒரு கோஷ்டியும் உருவாகி விட்டது.இதன் வெளிப்பாடு தற்போது கொலை சம்பவம் அடுத்து சாதி கலவரம் ஒத்திகை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்னும் மெத்தனமாக பின்னால் இயக்குவர்கள் மீதான நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? மோசமான விளைவை தவிர்க்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். இதில் கதர்சட்டை பிரமுகர்கள் மற்றும் சாதிஅமைப்பை சேர்ந்த சிலர்தான் என சொல்கிறார்கள்.

சமீபகாலமாக தாதுமணல் சட்டவிரோதமாக எடுப்பவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வாரந்தோறும் தூத்துக்குடி கலெக்டரிடம் மனு மற்றும் மீனவர்அமைப்பு திரட்டி ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வந்தார் சுபாஷ்பர்ணான்டோ.

இந்த நிலையில் கடந்த 23 ம் தேதி ஜோசப் பர்ணான்ந்து தலைமையிலான குருஸ்பர்ணான்தீஸ் மீனவர் பேரவை சார்பாக பலர் தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமாரிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் தடை அகற்றவும் அதன் தொடர்பாக மணல் அள்ளும் மீனவர் பெண்கள் ஒட்டுநர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டியிருப்பதால் நடவடிக்கை எடுக்க மனு அளித்தார்கள்.

இதனால் தாதுமணல் நிறுவனத்திற்கு ஆதரவாக குருஸபர்ணான்தீஸ் பேரவை தலைவர் ஜோசப் இருப்பதாக..தாதுமணல் நிறுவன எதிர்ப்பு அரசியல் பண்ணி வந்த சுபாஷ்பர்ணான்ந்து தலைமையிலான மீனவர் அமைப்பினர் கொதித்து மறுநாள் ஜோசப் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதையறிந்த ஜோசப் ஆதரவாளர்கள் முற்றுகையிட வருகின்றவர்களை திருப்பி தாக்க திரண்டனர்.பாத்திமா நகர் சாலையில் இரு கோஷ்டியை சேர்ந்தவர்களும் அடிதடியில் இறங்கும் நேரத்தில் காவல்துறை விழிப்பணர்வுடன் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக விரட்டி கலைந்து செல்ல வைத்தது.

அடுத்து 27-9-2013 அன்று காலை 11-மணியளவில் மீன்பிடி துறைமுகப்பகுதிக்கு இருசக்கரவாகனத்தில் ஜோசப் வந்து கொண்டியிருந்தார்.அப்போது 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அடித்து உதைத்து கீழே தள்ளி ஜோசப்பின் வாயில் விஷத்தை ஊற்றி விட்டு தப்பி சென்றது. ஜோசப் உயிரை காபாற்ற அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்த்தார்கள்.

இது தொடர்பாக சுபாஷ் பர்ணான்ந்து உட்பட 10- பேர் மீது தூத்துக்குடி மத்திய காவல்துறை நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 28 ம் தேதி மாலை ஜோசப் இறந்து விட்டார்.இதனால் நகர மத்தியப்பகுதியில் பதற்றம் நிலைவியது. 29 ம் அன்று ஜோசப் உடல் அடக்கம் செய்தனர் இதையொட்டி பாத்திமா நகர் ஜார்ஜ்ரோடு பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டது. இதனால், ஜாதிக்கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் தாதுமணல் விவகாரம் ஜாதி கலவரமாக வெடிக்க சிலர் மறைமுகமாக தூண்டுதல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதும் தொடர்கதையாகி வருவதாக சமுக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

ஜோசப் இறந்துவிட்டதால் எந்தவிதமான சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய உள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கூறப்படுபவர்கள் சம்பவம் நடந்த அன்று வேறு இடத்தில் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. உரிய விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட எஸ்.பி துரை கூறியுள்ளார்.

English summary
A fisherman who campaigned for resumption of coastal sand mining in Tuticorin was allegedly poisoned to death by a rival group that opposed such mining activity on the beach, police said. The victim, who was hospitalised on Friday, died on Saturday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X