ரஜினிக்கு எதிராகப் பேசினேனா? - கௌதம் கார்த்திக் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிராகப் பேசியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று நடிகர் கௌதம் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கௌதம் கார்த்திக் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதாக நேற்று செய்தி வெளியானது.

Goutham Karthik's explanation on Rajini politics

ஆனால் இதனை மறுத்துள்ளார் கௌதம். இதுகுறித்து அவர் கூறுகையில், "ரஜினி சார் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று என்னிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த நான் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவரை நான் சூப்பர் ஸ்டாராக மட்டுமே பார்க்க விரும்புகிறேன், என்றேன். அதற்கு மேல் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு என்பது போல எழுதிவிட்டார்கள்.

நான் ரஜினியின் படங்களை விரும்பிப் பார்ப்பவன். அவரை சூப்பர் ஸ்டாராகப் பார்க்கவே ஆசைப்படுகிறேன்," என்றார்.

முன்னதாக, தனது தந்தை கார்த்திக்கின் அரசியல் முடிவை நான் ஆதரிக்க மாட்டேன் என்று கௌதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Goutham Karthik has denied that he didn't spoke anything about Rajinikanth's politics.
Please Wait while comments are loading...