குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி- வீடியோ

  நெல்லை: குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதாக அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.

  தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாகதமிழகத்தின் தென் மாவட்டங்களின் கனமழை பெய்து வருகிறது.

  Heavy Water flow in Kutralam water falls

  இதனால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அதுபோல் பழைய குற்றால அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

  Heavy Water flow in Kutralam water falls

  இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் குற்றால அருவிகளில் நீர் வரத்து குறையத் தொடங்கியது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது.

  தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Heavy Rain hits in the Southern areas of Tamilnadu,this results water flow in Kutralam water hills. THe district administration bans to take bath in Kutralam main falls and five falls.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற