For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்தில் நடக்கும் கொலைகளை நாங்க எப்படி தடுக்க முடியும்?: கேட்பது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

How can we stop murders within family, asks CoP
சென்னை: சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 9 கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் 8 கொலைகள் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நடந்துள்ளன. அந்த கொலைகளை நாங்கள் எப்படி தடுக்கமுடியும் என்று கேட்கிறார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் ஜார்ஜ் கூறியதாவது:

சென்னையில் 2012-ஆம் ஆண்டில் 144 கொலைகளும், 2013-ஆம் ஆண்டில் 169 கொலைகளும், 2014-ஆம் ஆண்டில் 132 கொலைகளும் நடந்துள்ளன.

இதேபோல மற்ற குற்றங்களும் சென்னையில் குறைந்துள்ளன. ரவுடிகள், கூலிப்படையினர் நடத்தும் கொலைகளை வெகுவாக குறைத்திருக்கிறோம்.

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 9 கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் 8 கொலைகள் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நடந்துள்ளன.

குடும்பத்துக்குள் திடீரென்று நடக்கும் கொலைக் குற்றங்களை நம்மால் எப்படி தடுக்க முடியும்? கொலை நடந்த பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

சென்னையில் முதியவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தனியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றங்களை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

கொளத்தூரில் ஹேமாவதி என்ற பெண் கடந்த 20-ம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு, அவர் அணிந்திருந்த 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமாவதி மறுநாள் பரிதாபமாக உயிரிழந்தார். ஹேமாவதி கணவரின் மகன் ராஜேந்திரன் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம்" என்றார்.

வேப்பேரியில் மனைவி மஞ்சுவை கொன்ற கணவர் ஹேமந்த்ராஜை போலீஸார் சில மணி நேரங்களிலேயே கண்டுபிடித்துவிட்டனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி மறைத்து வைத்திருந்த நகைகள், அவர் பயன்படுத்திய ஸ்கூட்டர் போன்றவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம்.

ஹேமந்த்ராஜின் வீட்டருகே ஒரு பள்ளிக்கூடம் மற்றும் கோயிலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஹேமந்த்ராஜின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளையும் சாட்சிக்காக சேர்த்திருக்கிறோம் என்றார்.

கொலை குற்றங்களை தடுத்துவிட்டதாக கூறும் போலீசார், தினசரி கிலோகணக்கில் நகைகள் திருடு போகின்றனவே அதற்கு என்ன சொல்ல போகிறார்களோ?

அவ்வளவு நகைகளை ஏன் வீட்டில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்பார்களோ?

English summary
Chennai CoP George has said that police force cannot prevent murders within families due to feud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X