For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னா மரியாதை.. என்னா மரியாதை...!

Google Oneindia Tamil News

சென்னை: அது ஒரு அரசு அலுவலகம்... சரி 'நம்மாளு' எப்படி வேலை செய்கிறார் என்று பார்க்கலாமே என்று போயிருந்தபோது ஆச்சரியமான அனுபவம்... அப்படி ஒரு மரியாதை கிடைத்தது - எனக்கு!

சார்.. மேடம்.. சார்... மேடம்... இந்த வார்த்தைகளைத்தான் அங்கு பேசிய அனைவரிடமும் நீக்கமற பார்க்க முடிந்தது, கேட்க முடிந்தது.

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.. எல்லா அலுவலகங்களிலும் இப்படித்தானே சார், மேடம் போட்டுக் கூப்பிடுவார்கள் என்று உங்களது மைன்ட் வாய்ஸ் கேட்பது புரிகிறது..

அப்படியே 'ஓவர் டூ ஐடி ஆபீ்ஸ்'.. அங்க எப்படியெல்லாம் சக ஊழியர்களைக் கூப்பிடுகிறார்கள் என்று பார்க்கலாம் வாருங்கள்.!

ஹாய் மேன்....

ஹாய் மேன்....

தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் அதிகம் புழங்கும் வார்த்தைகளில் இந்த மேனும் ஒன்று. அதிக அளவில் இந்த மேன் ஐடி அலுவலகங்களில் புழங்குவதைக் கேட்க முடியும்.

ஹலோ ஃபோக்ஸ்...

ஹலோ ஃபோக்ஸ்...

இது இன்னொரு வார்த்தை.. பாஸ் ஏதாவது மீட்டிங் வைத்தால்.. போய் உட்கார்ந்த பின்னர், பெரும்பாலான பாஸ்கள் ஆரம்பிக்கும் முதல் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

டியர் இன்போஜீக்ஸ்...

டியர் இன்போஜீக்ஸ்...

இது இன்னொரு சுவாரஸ்யமான வார்த்தை. இந்த வார்த்தையையும் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் அதிகம் கேட்கலாம். இது தொழில் சார்ந்த வார்த்தையாக இருப்பதாலும் அதிகம் பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

ஹாய் ட்யூட்...

ஹாய் ட்யூட்...

இதையும் நிறையக் கேட்க முடியும். இது ஐடி அலுவலங்கள் என்று இல்லை.. நிறைய தனியார் அலுவலகங்களில் கேட்கலாம்.

ஹாய் கய்ஸ்...

ஹாய் கய்ஸ்...

இதுவும் ஒரு சம்பிரதாய ஐடி வார்த்தையாக மாறி விட்டது. ஆனால் ஐடி அலுவலகம் என்றில்லை, பொதுவான வார்த்தையாகவும் இது பலதரப்பட்ட அலுவலகங்களில் காணப்படுகிறது.

ஐயா....!

ஐயா....!

இந்த வார்த்தையை எங்கு அதிகம் கேட்கலாம் என்று சொல்லுங்கள்.. கரெக்ட்.. காவல் நிலையங்களில் கேட்கலாம். அங்கு கான்ஸ்டபிள் ஏட்டைப் பார்த்து ஏட்டையா என்பார். ஏட்டையா எஸ்.ஐயைப் பார்த்து ஐயா போடுவார். எஸ்.ஐ. இன்ஸ்பெக்டரை ஐயா என்பார். இன்ஸ்பெக்டர், டிஎஸ்பியைப் பார்த்து ஐயா என்பார். டிஎஸ்பிக்கு மேல் இது சாராக மாறும்.

பியூனாக இருந்தாலும் சார்தான்....!

பியூனாக இருந்தாலும் சார்தான்....!

அரசு அலுவலகங்களில் யாராக இருந்தாலும் சார் அல்லது மேடம்தான். அது பியூனாக இருந்தாலும் கூட சார் போட்டுத்தான் கூப்பிடுகிறார்கள். தங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவராக இருந்தாலும் மேடம் அல்லது சார் போட்டுத்தான் கூப்பிடுகிறார்கள்.

ஒரு விறைப்பு.. ஒரு முறைப்பு...

ஒரு விறைப்பு.. ஒரு முறைப்பு...

அதேசமயம், சில உயர் அதிகாரிகள் ஒரு விறைப்போடும், முறைப்போடும் பணியாற்றுவதையும் காண முடிகிறது. ஒரு விரட்டலோடும், மிரட்டலோடும் அப்டி... ஒரு கெட்டப்பாக வேலை பார்ப்பார்கள் அந்த உயர் அதிகாரிகள்... அதுதான் கொஞ்சம் பார்க்க சங்கட்டமாக இருக்கும்.

நல்ல பண்பாடு

நல்ல பண்பாடு

உண்மையில் இந்த சார், மேடம் என்று கூப்பிடுவது கேட்கவே நன்றாக இருக்கிறது. கேஷுவல் நலம் விசாரிப்புகள், மரியாதை விளித்தல்களை விட இந்த சார், மேடம் என்று கூப்பிடுவது, கூப்பிடுபவருக்கும், கூப்பிடப்படுபவருக்கும் ஒரு விதமான மரியாதையை, கெளரவத்தைத் தருவதாகவே தெரிகிறது.

நீங்க என்ன சொல்றீங்க...?

English summary
If you enter into an IT office you can hear more info geeks, folks and all. But it is entirely contrast in govt offices. See this round up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X