For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு? ஜெ., கருணாநிதிக்கு கை கொடுக்குமா நம்பர் ராசி?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி கணக்கு, தொகுதி சீட் என பலவிதி கணக்குகளை போட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கட்சித் தலைவர்களின் பிறந்த தேதி மற்றும் தேர்தல் தேதி அடிப்படையில், எண் கணித நிபுணர்களால் கணிக்கப்பட்ட வெற்றி நிலவரம், அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகி இருக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம்,ஆன்மீகம்,எண் கணிதம் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. ஜெயலலிதாவின் ராசி சிம்மம். நட்சத்திரம் மகம். மகம் நட்சத்திரத்தின் அதி பதி புதன். புதனின் நிறம் பச்சை. 5ம் எண்ணுக்கு உரியவர் புதன். புதனை அதிபதியாக கொண்டவர்கள் அறிவாற்ற லும் ஜோதிட நம்பிக்கையும் மிக்கவர்களாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம்

அரசியல் ரீதியாக கட்சி ரீதியாக ஒவ்வொரு செயல்பாட்டையும், ஜோதிட கணித அடிப்படையில் கணக்கிட்டுத் தான் அமைத்துக் கொள்வார்.இது அனைவரும் அறிந்த உண்மைதான்.அவர் நியூமராலஜி நம்பிக்கையும் எப்போதும் கொண்டிருக்கிறார்.

அதேபோல, ஒருவருடைய ராசி -நட்சத்திரத்திற்கேற்ப நடக்கும் திசைக்கும் தசாபுக்திக்கும் ஏற்ப ராசி எண் மாறும். அந்த வகையில் 1991-96 களில் ஜெயலலிதாவின் ராசி எண் 9ஆக இருந்தது. அதற்கேற்ப ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளைவும், அமைச்சர்கள் கூட்டு எண்ணிக்கையும், தனது கார் எண் ஆகியவையும் 9 வருமாறு பார்த்துக் கொண்டார். பின்பு அது 6 ஆக மாறியது.

இதற்கு அடுத்து, 6 வது எண் மாற்றப்பட்டு 7 வது எண் ராசியாக கருதப்பட்டது.

நம்பர் 7

நம்பர் 7

கடந்த 2011 தேர்தல் கால கட்டத்தில் அவரது ராசி எண் 7. அதனால்தான் அ.தி.மு.க. சார்பில் 160 வேட்பாளர் களை களத்தில் நிறுத்தினார் அவர். இதன் கூட்டுத்தொகை 7. முதல்வராக பொறுப்பேற்ற தேதி 16. அவர் உட்பட அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 34. இவை களின் கூட்டுத்தொகை 7. முதல்வராக பொறுப் பேற்றதும் முதன் முதலில் கையெழுத்திட்ட கோப்புகளின் எண்ணிக்கையும் 7தான்.

நம்பர் 2, 5

நம்பர் 2, 5

தற்போது அவரது ராசி எண் 2, 5ஆக இருக்கிறது. அதனால், ராசி எண் 2 அல்லது புதனுக்குரிய எண் 5 இருப்பதுபோல தன்னுடைய முக்கிய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்கிறார். ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நாள் 23 ஆம் தேதி. முதலமைச்சராக பதவியற்றதும் 5 திட்டங்களுக்கான ஃபைல்களில் கையெழுத்திட்டு பணியைத் துவக்கிவைத்தார்.

ஜெயலலிதா விடுதலை

ஜெயலலிதா விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, மே, 11ல், ஜெயலலிதா விடுதலையானார்; அந்த தேதியின் கூட்டு எண் இரண்டு. இதையடுத்து, மீண்டும் எம்.எல்.ஏ.,வாக, அவர் ஆர்.கே.நகரை தேர்வு செய்தார். அந்த தொகுதியின் எண், 11.இதன் கூட்டுத் தொகை இரண்டு.

எல்லாமே 2தான்

எல்லாமே 2தான்

சட்டசபையில் ஆளுநர் உரைக்கான கூட்டத் தொடர் துவங்கிய தேதி 20. முடியும் தேதி 23. அ.தி.மு.க.வில் விருப்ப மனு வாங்கும் தேதி 20. வாங்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 26,174 கூட்டுத்தொகை 20

ஏகாதசி திதி

ஏகாதசி திதி

பகவான் விஷ்ணுவிற்கு உகந்த திதி ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி விரதம் பிரசித்தி பெற்றது. ஜெயலலிதாவும் விஷ்ணு பக்தை என்பதால் சமீப காலமாக அனைத்து செயல்களும் ஏகாதசி திதியில் தொடங்க உத்தரவிடுகிறார். கடந்த ஜனவரி 6ம் தேதியன்று மார்கழி மாதம் தேய்பிறை ஏகாதசியன்று ஜெயலலிதா பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

உற்சாகத்தில் ஜெ

உற்சாகத்தில் ஜெ

மார்ச் 4ம் தேதி தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது. இதுவும் ஜெயலலிதாவிற்கு உகந்த ஏகாதசி திதியாகவே அமைந்து விட்டது. இதுவே ஜெயலலிதாவிற்கு உற்சாகத்தைக் கொடுக்க மார்ச் 6ம் தேதி புதன் ஆதிக்க எண்ணான 5 பேரிடம் நேர்காணல் நடத்தியுள்ளார்.

வேட்பாளர் பட்டியல்

வேட்பாளர் பட்டியல்

இந்த ஆண்டு தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வரும் 11ம் தேதி அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு, கூட்டணி அறிவிப்பு போன்ற முக்கிய அறிவிப்பு கள் ஏதேனும் அன்று வெளியாகலாம் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சட்டசபை தேர்தல் தேதி

சட்டசபை தேர்தல் தேதி

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு, மே, 16ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இதே தேதியில்தான் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
இந்த தேதி, கட்சி தலைவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சாதகமாகவே உள்ளது. ஆனால், விதி எண் என்று சொல்லக் கூடிய தேர்தல் தேதிக்கான கூட்டுத்தொகை, 1+6+5+2+0+1+6 = 21; 2+1 = 3. இந்த எண், ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே உள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாள்

ஜெயலலிதா பிறந்தநாள்

ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-2-1948. அதன் கூட்டுத்தொகை 2+4+2+1+9+4+8 = 3. தேர்தலில் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கை, கூட்டணி கட்சிகளின் சேர்க்கையை பொறுத்து, வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தலாம்.ஜெயலலிதாவுக்கு நட்பு எண் - 9, 5. சம எண் - 4,7,8. இதன் கூட்டுத் தொகையில் வரும் எண்களை தேர்ந்தெடுத்து போட்டியிடுவது நல்லது என்கின்றனர் ஜோதிடர்கள்.

எண்களின் கூட்டுத்தொகை

எண்களின் கூட்டுத்தொகை

முந்தைய தேர்தல் வெற்றிகளை பார்த்தால், சில உண்மைகள் புரியும். 2001ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக 141 தொகுதிகளில் போட்டியிட்டு, 132ல் வெற்றி பெற்றார். 2011ல், 160 தொகுதிகளில் போட்டியிட்டு, 150லும் வெற்றி பெற்றது . இதன் கூட்டுத்தொகை, நட்பு மற்றும் சம எண்களிலேயே உள்ளது.

வெற்றிக்கு வாய்ப்பு

வெற்றிக்கு வாய்ப்பு

2011 தேர்தலில், 38.40 சதவீத ஓட்டுகளை அ.தி.மு.க., பெற்றது. இதன் கூட்டுத்தொகை, 6. அதனால் ஆட்சிக் கட்டிலில், அ.தி.மு.க. அமர்ந்தது.
வரும் தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து, 141, 150 அல்லது, 160 தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்கின்றனர்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்த எண் 3 இவரது நட்பு எண் - 1, 9, சம எண் - 2, 4, 8, பகை எண் - 6. கருணாநிதியின் பிறவி எண்ணோடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் பெயர் மற்றும் பிறந்த தேதியின் நட்பு எண்ணோடு ஒத்துப் போகிறது. விஜயகாந்தின் பிறந்த எண் 25 கூட்டுத் தொகை 7 எனவே திமுக, தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் ஜோதிடர்கள்.

யாருக்கு அரியணை

யாருக்கு அரியணை

அரசியல் கட்சியினர் கூட்டணி கணக்கு போட, ஜோதிடர்களோ கூட்டுதொகை கணக்கு படி வெற்றியை கணித்து கூறி வருகின்றனர். இந்த நம்பர்களின் கூட்டுத்தொகைபடி கூட்டணி அமைந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 117 சீட்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைக்க முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

English summary
Numerology is gaining numero uno position among people's priorities.Jayalalithaa's methods may be frowned upon by most people, but her faith in numerology is shared by many bangaloreans. Birth number of Jayalalithaa is 6 and she is bestowed with Luck number is 3.Individuals born with Birth Number 6 are extremely magnetic, unyielding and are very determined in carrying out their plans,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X