For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து உள்நாட்டு பயணிகள் விமானங்கள் இயக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

அரக்கோணம்: வெள்ளம் பாதித்ததால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து தற்காலிகமாக உள்நாட்டு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகின்றன.

கனமழை வெள்ளத்தால் சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ந் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

Limited Commercial Flights Operate from Arakkonam

தற்போது சென்னையில் ராணுவம் முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளம் 2 நாட்களுக்கு தற்காலிக பயணிகள் விமான நிலையமாக செயல்பட தொடங்கியுள்ளது.

அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் சென்னை வரும் பயணிகள் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதேபோல் அங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. இன்று காலை 8.30 மணி முதலாவது பயணிகள் விமானம் விமான கடற்படை தளத்தில் தரையிறங்கியது.

ஒரு நாளைக்கு 6 விமானங்கள் வீதம் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் ரூ1,000 முதல் ரூ2,000 கட்டணம் வரை வசூலிக்கப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து இன்றும் நாளையும் இயக்கப்படும் விமானங்கள் விவரம்:

இன்று.....

கொச்சி - அரக்கோணம் - பெங்களூரு விமானம் காலை 09.45க்கு அரக்கோணம் வந்தது. இந்த விமானம் காலை 11.15 மணியளவில் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

கொச்சி - அரக்கோணம் - பெங்களூரு விமானம் மாலை 3 மணிக்கு வந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

ஹைதராபாத் - அரக்கோணம் - பெங்களூரு விமானம் இன்று பகல் 1 மணிக்கு புறப்படும்.

ஹைதராபாத் - அரக்கோணம் - ஹைதராபாத் விமானம் பகல் 2.45 மணிக்கு புறப்படும்.

ஹைதராபாத் - அரக்கோணம் - பெங்களூரு விமானம் இன்று இரவு 7.45 மணிக்கு புறப்படும்,

ஹைதராபாத் - அரக்கோணம் - ஹைதராபாத் விமானம் நாளை காலை 8.55 மணிக்கு புறப்படும்.

ஹைதராபாத் - அரக்கோணம் - டெல்லி விமானம் நாளை மாலை மாலை 6 மணிக்கு புறப்படும்.

English summary
DGCA arranges limited commercial flight operations from INS Rajali, Arakkonam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X