For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிவிட்டர் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் 'மலையாளி'!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: டிவிட்டரில் முதல் முறையாக மலையாள வார்த்தை ஒன்று தேசிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் இந்தியாவின் 12 பிராந்திய மொழிகளிலும், ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் வசதி சில மாதங்கள் முன்பு ஏற்படுத்தப்பட்டது.

#മലയാളീസ് Malayalam hashtag trending no. 1 on Twitter

இதையடுத்து, வடமாநிலத்தவர்கள், ஹிந்தியில் சில வார்த்தைகளை டிரெண்ட் செய்தனர். தமிழில் முதல் முறையாக தமிழ்வாழ்க' என்ற வார்த்தை டிரெண்ட் செய்யப்பட்டது.

ஆனால், குட்டி மாநிலமான கேரளா இன்று, #മലയാളീസ് என்ற வார்த்தையை டிரெண்ட் செய்து வருகிறது. இதன் அர்த்தம், 'மலையாளிஸ்' என்பதாகும். தேசிய அளவில் டாப் டிரெண்டிங் டாபிக்காக மாறியது இந்த வார்த்தை.

தென் இந்தியாவில் டிவிட்டரை அதிகம் பயன்படுத்துவோர் தமிழர்கள்தான். ஆனால் இப்போது மல்லு நாடு இதற்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா, அல்லது பதிலுக்கு ஹேஸ்டேக் போடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

English summary
Days after Twitter extended support for hastags in 12 Indian languages, #മലയാളീസ് , became a trending topic on the micro-blogging site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X