For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுக, ஆம் ஆத்மி சின்னங்களில் சிக்கல் இல்லை: வி.சி.கவுக்கு மோதிரம்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களுக்கான 87 சின்னங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. நட்சத்திரம் சின்னம் நீக்கப்பட்டு விட்டதால் விடுதலைச் சிறுத்தை கள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படக்கூடும் எனத் தெரி கிறது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தங்களுக்கு நட்சத்திரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சுயேச்சைகளுக்கான சின்னங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் இறுதி செய்துள்ளது.

3 சின்னங்கள் நீக்கம்

3 சின்னங்கள் நீக்கம்

ஏற்கெனவே இருந்த 90 சின்னங்களில் ஐஸ்கிரீம், கூடை மற்றும் நட்சத்திரம் ஆகிய மூன்று சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 87 சின்னங்களில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மோதிரம் கிடைக்குமா?

மோதிரம் கிடைக்குமா?

இதைத் தொடர்ந்து, நட்சத்திரம் சின்னம் கேட்கும் எண்ணத்தை கைவிட்ட விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினர், அதற்குப் பதிலாக மோதிரம் சின்னத்தை கேட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமா ரிடம் அக்கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் வெள்ளிக்கிழமை மனு கொடுத்துள்ளார்.

மதிமுக பம்பரம்

மதிமுக பம்பரம்

மதிமுக, கடைசியாக போட்டியிட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் அங்கீகாரத்தை இழந்தது. இருந்தபோதி லும், தங்களுக்கு மீண்டும் பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

விசிகவுக்கு சிக்கல்

விசிகவுக்கு சிக்கல்

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி மட்டுமே ஆகும். அங்கீகாரம் பெற்ற கட்சி இல்லை. அதனால், அவர்கள் கேட்ட படி நட்சத்திரம் சின்னம் கிடைக்காது. ஆனால், மோதிரம் சின்னம் தருவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

பம்பரம் சுழலும்

பம்பரம் சுழலும்

மதிமுக, அங்கீகரிக்கப்பட்டிருந்த கட்சியாகும். அதுபோன்ற கட்சிகள் அங்கீகாரத்தை இழந்தாலும் 6 ஆண்டுகள் வரை பழைய சின்னத்தில் போட்டியிட வழிவகை உள்ளது. அதுபோல், டெல்லியில் அங்கீகாரம் பெற்றுவிட்டதால் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

English summary
The Marumalarchi Dravida Munnetra Kazhagam would continue to have ‘top’ as its symbol for the next six years despite the Election Commission derecognising it as regional party in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X