இருக்ககூடாது.. நாகை மாவட்டத்தில் பழமையான 32 கட்டடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகை: மாவட்டம் முழுவதும் உள்ள பழமையான 32 கட்டங்களை இடிக்க ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் பொறையாறு போக்குவரத்து பணிமனையின் ஊழியர்கள் ஓய்வரை அண்மையில் இடிந்து விழுந்தது. இதில் 9 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Nagai collector ordered to demolish 32 old buildings

பழமையான அந்தக் கட்டடத்தை அரசு பாராமரிக்காததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இன்று தீயணைப்பு அலுவலக கட்டடம் இன்று இடிந்து விழுந்தது.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் பழமையான 32 கட்டடங்களை இடிக்க ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ளத்தால் 394 இடங்கள் பாதிக்க படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

29 புயல் பாதுகாப்பு மையங்கள், 9 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nagai collector ordered to demolish 32 old builddings. He said steps have been taken to prevent flood.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற