For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ., சவப்பெட்டி பிரச்சாரம் - தேர்தல் ஆணையத்திற்கு மதுசூதனன் விளக்கம்

ஜெயலலிதாவின் உருவ பொம்மையை வைத்து சவப்பெட்டி பிரச்சாரம் செய்த மதுசூதனன் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய வகையில் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து அதன் மீது தேசியக்கொடியை போர்த்தி ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்தனர். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதற்கு மதுசூதனன் சார்பில் விளக்கம்ட அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் அணியினர் ஒரு படி மேலே போய் ஜெயலலிதா உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து தேசியக்கொடி போர்த்தப்பட்டு அதை பிரசார ஜீப்பின் முன்னால் வைத்துக்கொண்டு தெரு, தெருவாக போய் வாக்கு சேகரித்தனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது.

சவப்பெட்டி பிரச்சாரம்

சவப்பெட்டி பிரச்சாரம்

ஜெயலலிதா உருவபொம்பை மீது தேசியக்கொடி போற்றப்பட்டிருந்ததை அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது தேசியக் கொடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் ஓபிஎஸ் அணியினருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அப்போது தேசியக் கொடியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் ஓபிஎஸ் அணியினருக்கு உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் பிரசாரத்திற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று காவல் துறையினரும் அறிவுறுத்தினர். இதையடுத்து தேசியக் கொடி அகற்றப்பட்டது.

தேர்தல் ஆணையம் இதுகுறித்து மதுசூதனனிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பிரச்சாரம் பற்றி தேர்தல் ஆணையத்திடம் மதுசூதனன் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சவப்பெட்டி பிரச்சாரம்

சவப்பெட்டி பிரச்சாரம்

சவப்பெட்டியை வைத்து பிரசாரம் மேற்கொள்ள நாங்கள் ஒப்புதல் வழங்க வில்லை என்று கூறியுள்ள மதுசூதனன், கட்சித் தொண்டர்களின் ஆர்வமிகுதியால் நடந்துள்ள சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசியக்கொடி அவமதிப்பில்லை

தேசியக்கொடி அவமதிப்பில்லை

மதுசூதனன் தரப்பில் மனோஜ் பாண்டியன் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்துள்ளார். தேசியக் கொடியை அவமதிக்கும் எண்ணமில்லை என்றும் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Manoj Pandian explaned Election Commission for Jayalalithaa's 'dead body'campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X