ரூ 3 லட்சம் கடனை ஓபிஎஸ் திருப்பி தருவாரா? முதல்வரே வாங்கித் தாங்க! தஞ்சையில் பரபரக்கும் போஸ்டர்
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளரிடம், தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ரூ 3 லட்சம் வாங்கிவிட்டு தரவில்லை என குற்றம்சாட்டி போஸ்டர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்தவர் சிங்.எஸ்.செல்வராஜ். இவர் அதிமுக நகர் செயலாளராகவும் திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இவர் திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்தார்.

இவரிடம், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொரித்த பட்டுப்புடவை மற்றும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் உருவம் பொரித்த பட்டுப்புடவை என ஓபிஎஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார.
இந்த இரு புடவைகளுக்கு ரூ 3 லட்சமானதாம். இதை ஓபிஎஸ், செல்வராஜுக்கு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் தற்போது திமுகவில் இணைந்துவிட்டார். இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஓபிஎஸ்ஸை நகரமன்றத் தலைவர், எம்எல்ஏ, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் ஆகிய பதவிகளை கொடுத்து அழகு பார்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றும் அவரை மறந்து இன்று திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்தது துரோகம் என்றும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னிடம் வாங்கி பட்டுப்புடவைக்கான தொகையை தர வேண்டும் என கேட்டு அவருக்கு எதிராக செல்வராஜ் திருபுவனம் பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.
சோழன் பட்டு கூட்டுறவு சங்கம் சிறந்த வடிவமைப்புக்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ளது. இதற்காக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை சந்தித்து நினைவுப்பரிசாக பட்டுப்புடவையை செல்வராஜ் வழங்கினாராம்.
அது போல் கோவைக்கு பிரதமர் மோடி வந்த போது, அவருக்கு நினைவு பரிசு வழங்குவதற்காக மோடி உருவம் பதித்த பட்டுப்புடவையை ஓபிஎஸ் கேட்டாராம். அதற்கு செல்வராஜ், அவர் விரும்பியபடியே டிசைன் செய்து புடவையை கொடுத்தாராம்.
இத்தனை ஆண்டுகளாக அதற்கான பணத்தை கேட்டும் அவர் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. தற்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்டதால் அந்த பணத்தை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தருவாரா என கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications