For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தி திணிப்பிற்கு கண்டனம்... புரட்சி பாரதம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Google Oneindia Tamil News

சென்னை: புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பூந்தமல்லி கரையன்சாவடி சீனிவாசா பத்மாவதி மஹாலில் நடந்தது. கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமை வகித்து பேசினார்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்ட பொது மக்களுக்கும் , புரட்சி பாரதம் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .

Puratchi Bharatham's executive committee meeting

அதனைத் தொடர்ந்து முல்லை பெரியார் அணையை மேற்பார்வையிட மூவர் குழுவை நியமிக்க உத்தரவிட்ட மத்திய அரசுக்கும், உரிமையை பெற்று தந்த தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .

காவிரி மேலாண் மை வாரியம் அமைக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும், ரயில் கட்டண உயர்வை வன்மையாக புரட்சி பாரதம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஈராக்கில் தத்தளிக்கும் 40 இந்தியர்களை மீட்கவேண்டும், வலை தளங்களில் இந்தி மொழியை திணிப்பதை கண்டிப்பது, கட்சியின் நிர்வாக சீரமைப்புக்காக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

English summary
The state executive committee meeting of Puratchi Bharatham party held at Chennai. the meeting was presided by the party chief Jegan Moorthy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X