சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் ஆடி மாதத்திற்கு பிறகும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வந்தது.

Rain in majority of the places in tamil nadu

கத்திரி வெயிலை போன்று வெயில் சுட்டெரித்ததோடு அனல் காற்றும் வீசியதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். ஆனாலும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து பெரும்பாலான மாவட்டங்களை சில்லாக்கியது.

இந்நிலையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதானல் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி, மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அடித்து வெளுத்த வெயிலுக்கு இதமாக திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain occures in Chennai, chennai outer. Trichy, madurai, Dindugul also rain ocured. Chill wind breezed Due to this rain in majority of the places in tamil nadu.
Please Wait while comments are loading...