தோல்வி திமுகவுக்கு அல்ல.. ஜனநாயகத்துக்கு.. தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும்: ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகர் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து உயர்நிலைக் குழுவில் ஆய்வு செய்யப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்கே நகரில் தோற்றது திமுக அல்ல ஜனநாயகம் தான் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிப்பதாவது,

RK Nagar loss is not for DMK its for Democracy: Stalin

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது பணநாயகம் என்றும் தோல்வி திமுகவுக்கு அல்ல எனவும் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகரில் விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி வெகுமானமல்ல, பெரும் அவமானம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் தோற்றது திமுக அல்ல என்றும் இந்திய ஜனநாயகம் தான் என்றும் அவர் கூறினார்.

20 ரூபாயை டோக்கனாக வைத்து அரசியல்வாதிகள் 10000 ரூபாய் டெபாசிட் செய்ததாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president stalin said that the RK Nagar defeat will be examined in the High Committee meet. He said the RK Nagar defeat is not for DMK its for Democracy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற