கோவையில் அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்தது... அச்சத்தில் மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை நீலாம்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.

கோவை நீலாம்பூரில் உள்ளது சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கட்டிடம் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப்பள்ளிக்கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

School roof collapses in Coimbatore

உள்ளூர்வாசிகள் புகார் கூறியது போலவே, பள்ளியின் மேற்கூரையில் இருக்கும் காண்கரீட்கள் ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன. இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.

பள்ளி மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கோவை அருகே சோமனூரில் பஸ் ஸ்டான்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதேபோல ஒரு சம்பவம் நடந்து மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முடின் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Govt school roof collapsed in Nilambur, near Coimbatore. No one was injured.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற