For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூஸிலாந்துக்கு அகதிகளாகப் போய் நடுக்கடலில் தத்தளிக்கும் தமிழர்கள் – இந்தியா உதவ திருமா. கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: நியூசிலாந்தில் தஞ்சம்புகச் சென்ற ஈழத்தமிழ் அகதிகள் நடுக்கடலில் தத்தளிக்க விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில், "நியூசிலாந்து நாட்டில் தஞ்சம்கோரி கடல்வழியாகப் படகில் பயணம் செய்த 54 ஈழத் தமிழர்களும், 10 வங்கதேசக்காரர்களும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் ஆஸ்திரேலியச் சுங்கத் துறையினராலும் கடற்படையினராலும் வழிமறிக்கப்பட்டு அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்டு நடுக்கடலில் தத்தளிக்க விடப்பட்டுள்ளனர்.

Tirumavalavan released a statement about Srilankan refugees

கடலில் குதித்து நீந்தி தற்போது திமோர் தீவுக்கு உட்பட்ட குப்பாங் என்ற இடத்தில் அவர்கள் அனாதைகளாக நிற்கின்றனர். நியூசிலாந்து நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுவதே அவர்களது கோரிக்கை எனத் தெரிகிறது. அவர்களுக்கு இந்திய அரசு தலையிட்டு உதவவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த இரண்டு மாதங்களாக இந்தோனேசியாவில் அகதிகளாகத் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் அங்கிருந்துதான் நியூசிலாந்துக்குச் சென்றுள்ளனர். தற்போது குப்பாங்கில் ஆதரவு ஏதுமின்றி உயிருக்குப் போராடிவரும் ஈழத் தமிழர்கள் 54 பேரில் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர்.

எனவே, அவர்களது துயரநிலையை உணர்ந்து இந்திய அரசு இதில் தலையிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். ஈழத் தமிழர் சிக்கலுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பது ஒன்றே இத்தகைய அகதிகளின் பிரச்சனைக்கு முடிவுகட்டும்.

இந்திய அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் ஈழத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாண இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tirumavalavan released a statement for Sri Lankan refuges trapped in deep sea side in New Zealand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X