For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூண்டோடு அதிகாரிகள் அதிரடி மாற்றம்... தினகரனிடம் தோற்றுப் போன சசிகலா, திவாகரன்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் அதிரடி மாற்றத்தின் பின்னணியில் அதிமுக அரசின் ரிமோட் கண்ட்ரோல் தினகரன் மட்டுமே என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த அதிரடி மாற்றம் முழுவதுமே தினகரனின் உத்தரவால் மட்டுமே போடப்பட்டது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

சசிகலா சிறைக்குப் போனது முதலே ஆட்சியும் கட்சியும் தமக்கானதே என முடிவெடுத்துவிட்டார் தினகரன். ஆளுநரை சந்திப்பது, ஆட்சி அமைப்பது என அனைத்திலும் தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார் தினகரன்.

அதேநேரத்தில் வெங்கடேஷ், நடராஜன் மற்றும் திவாகரன் உள்ளிட்டோரை ஓரம்கட்டி ஒதுக்கியும் வைத்துவிட்டார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் உத்தரவுகளையும் ஏற்க கூடாது என முதல்வர் எடப்பாடியார் உள்ளிட்டோருக்கு உத்தரவை போட்டார் தினகரன்.

தீபக்கின் பின்னணி

தீபக்கின் பின்னணி

இந்த அதிகாரப்போட்டியில்தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீப, திடீரென தினகரனுக்கு எதிராக கலகக் குரல் கொடுத்தார். சசிகலாவை தாம் எப்போதுமே ஆதரிப்பேன் என உருகினார்.

திருத்தம் செய்த சசி

திருத்தம் செய்த சசி

இதனிடையே ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக இளவரசி மகன் விவேக் ஒரு பட்டியலுடன் பெங்களூரு சிறைக்கு போய் சசிகலாவை பார்த்தார். அதில் சசிகலா சில திருத்தங்களை செய்து தினகரனிடம் கொடுக்க சொன்னாராம்.

திவாகரன் மகனுக்கு நோ

திவாகரன் மகனுக்கு நோ

அதேபோல் திவாகரன் மகனும் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலுடன் சசிகலாவை பெங்களூரு சிறையில் பார்க்க போனாராம். ஆனால் விவேக்கிடம் கொடுத்தது இருக்கட்டும்.. இதை அப்புறமா பார்க்கிறேன் என முதல்வர் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கிறார் சசிகலா.

திவாகரன் மகனுக்கு நோ

திவாகரன் மகனுக்கு நோ

அதேபோல் திவாகரன் மகனும் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலுடன் சசிகலாவை பெங்களூரு சிறையில் பார்க்க போனாராம். ஆனால் விவேக்கிடம் கொடுத்தது இருக்கட்டும்.. இதை அப்புறமா பார்க்கிறேன் என முதல்வர் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கிறார் சசிகலா.

அதிரடி காட்டிய தினகரன்

அதிரடி காட்டிய தினகரன்

விவேக்கும் நம்பிக்கையுடன் திவாகரனிடம் பட்டியலை கொடுத்து ரிசல்ட்டுக்கு காத்திருந்தார். ஆனால் சசிகலா கொடுத்த அதிகாரிகள் பட்டியலுக்கு நேர் மாறாக இருந்ததாம். இதற்கு காரணமே தினகரன்தானாம்.. தாம் விரும்பிய ஒரு பொம்மை அரசு நடக்கிறது என்பதை நிரூபிக்க இந்த வியூகத்தைப் போட்டாராம் தினகரன்.

நாங்க ஜெயிச்சோம்

நாங்க ஜெயிச்சோம்

இதனால் திவாகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் கூட்டம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம். ஆனால் தினகரன் தரப்போ முதல் ரவுண்ட்டில் சசிகலா, திவாகரனை எங்க "எம்.பி" எப்படி வீழ்த்தினார் பார்த்தீர்களா? என கண்சிமிட்டுகின்றனர்.

English summary
Sources said that TamilNadu IAS and IPS officials transeffered on yesterday as per the CM Edappadi Palanisamy's Remote Control TTVD.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X