குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கல்லூரி மாணவிகள் ஆய்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆய்வு நடத்தினர்.

மிழகத்தில் அருவிகளின் நகரமாக விளங்கும் இயற்கை அன்னை கொடுத்த கொடையாக கருத்தப்படுவது குற்றாலம். சீசன் காலங்களில் சுமார் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

Travelers have given opinion for kutralam

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பொருளாதாரத்துறை மாணவிகள் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு நடைபெற்றது.

இதில் சுகாதாரம், அடிப்படை வசதிகள்,தங்கும் வசதி, உணவகங்கள், திருடர்கள் தொல்லை, வாகன நிறுத்தும் இடத்திற்கான கட்டணங்கள், உடைமாற்றும் அறை வசதிகள், பொழுது போக்கு வசதிகள், அருவிகளுக்கு செல்லும் பாதைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம், குற்றாலத்தின் அழகை பாதுகாக்கும் ஆலோசனைகள் கழிவறை வசதி , உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தனியாக வருபவர்கள், நண்பர்களோடு வருபவர்களிடம் கேட்டு படிவத்தில் நிரப்பி ஆய்வு செய்தனர்.

Travelers have given opinion for kutralam

மேலும் இந்த ஆய்வின் போது வாகன கட்டண வசூல், திருட்டு பயம், பொழுதுபோக்கு அம்சங்கள், சாலை வசதிகள், இரவு நேரத்தில் குளிப்பதற்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், படகு துறை வசதி, அருவிகளை பாதுகாக்க தேவையான அலோசனைகள் உள்ளிட்ட கேள்விகளையும் கேட்டு சர்வே செய்தனர்.

இந்த சர்வே முறையாக தொகுக்கப்பட்டு விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்குகின்றனர். ஆண்டுத்தோறும் வழங்கப்ப்டும் மாணவிகளின் ஆய்வுகளைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sri Parasakthi College for Women students review in kutralam for developmen
Please Wait while comments are loading...