விசிக நிர்வாகிகள் மீது கொடூரத் தாக்குதல்- பாஜகவை கண்டித்து நவ.3-ல் போராட்டம்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைத் தாக்கிய பா.ஜ.க.,வினரைக் கண்டித்து நவம்பர் 3ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

மெர்சல் திரைப்பட விவகாரத்தில் கருத்து தெரிவித்த திருமாவளவனை, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்று விமர்சித்து இருந்தார் தமிழிசை. இதனால், சில நாட்களாகவே பா.ஜ.க.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் விடுதலை சிறுத்தையினர்.

VCK Leader Thirumavalavan condemns the act of BJP cadres

இந்நிலையில், நேற்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டுத்திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார் பா.ஜ.க.,வின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். அப்போது அவருக்கு வி.சி.க.வினர் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க ஆதரவாளர்கள், காரில் இருந்து இறங்கி வந்து கறுப்புக்கொடி காட்டிய நான்கு பேரை ஓடஓட விரட்டித் தாக்கினர். போலீஸார் அவர்களை மீட்டு வாகனத்தில் ஏற்றினர். அப்போதும் விடாமல் வந்த பா.ஜ.க.,வினர் அந்த வாகனத்தையும் சரமாரியாகத் தாக்கினர்.

இந்தச் சம்பவம் குறித்து இன்று கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க.,வினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. வி.சி.க மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நவம்பர் 3ம் தேதி போராட்டம் நடக்கும் என்று அறிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK Leader Thirumavalavan condemns the act of BJP cadres in Mayiladuthurai. Announced a protest on November 3rd to condemns the BJP

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற