நெல்லையில் பரவலாக மழை.. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Posted By: KMK ESAKKIRAJAN
Subscribe to Oneindia Tamil

  ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி

  நெல்லை: பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்ததால் கடுமையான வெப்பம் நிலவியது.

  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பாபநாசம், அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

  water inflow increased in nellai dams

  நள்ளிரவில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, குண்டாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அம்பை, சேரன்மகாதேவி, பாளை, சங்கரன்கோவில் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்தது.

  மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழையால் களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்,

  பாபநாசம்:

  உச்சநீர்மட்டம் : 143 அடி

  நீர் இருப்பு : 23.05 அடி

  நீர் வரத்து : 33.10 கன அடி

  வெளியேற்றம் : 122.25 கனஅடி

  சேர்வலாறு :

  உச்ச நீர்மட்டம்: 156 அடி

  நீர் இருப்பு : 19.68 அடி

  நீர்வரத்து : 120.39 கன அடி

  வெளியேற்றம்: இல்லை

  மணிமுத்தாறு :

  உச்ச நீர்மட்டம்: 118 அடி

  ர் இருப்பு : 80.35 அடி

  நீர் வரத்து : 63 கன அடி

  வெளியேற்றம்: 50 கன அடி

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Water inflow increased in Nellai dams

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற