For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான்கு கலர் இருக்கு.. ஆனால் எடுத்த எடுப்பிலேயே"ரெட்" ஏன்?

ரெட் அலர்ட் என்றால் என்ன? என தெரிந்து கொள்வோம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ரெட் அலெர்ட் என்ன ?- வீடியோ

    சென்னை: அது என்ன ரெட் அலர்ட்? நமக்கு அதனால் பெரும் ஆபத்து இல்லை என்று சொல்லி விட்டாலும், ரெட் அலர்ட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமோ?

    மழையின் அளவை முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதுகுறித்த எச்சரிக்கையை மக்களுக்கு சொல்வதுதான் அலார்ட் என்பது. இந்த எச்சரிக்கையை சொல்வதற்கு நிறங்களை பயன்படுத்தி சொல்கிறது இந்திய வானிலை மையம்.

    [ தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ]

    4 நிறங்கள்

    4 நிறங்கள்

    இப்படி நிறங்களை வைத்து எச்சரிக்கை விடுத்தால் அது பாமர மக்களுக்கும் எளிதாக செல்லும் என கருதப்படுகிறது. முன் எச்சரிக்கையின் அடிப்படையில் அந்த நிறங்கள் மொத்தம் 4 ஆக பிரிக்கிறாரகள். அதாவது க்ரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் என உள்ளது,

    பச்சை நிறம்

    பச்சை நிறம்

    இதில் க்ரீன் என்கிற பச்சை நிறம் என்று அறிவித்தால் ஒன்னும் பிரச்சனை கிடையாது, எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை. எல்லாமே கூல் என்று அர்த்தம்.

    வானிலை மோசம்

    வானிலை மோசம்

    அதேபோல எல்லா அதாவது மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தால் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தம். மூன்றாவதாக அம்பர் அதாவது ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்தால் வானிலை நிலைமை மோசமாக உள்ளது, எனவே உரிய பாதுகாப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

    ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    ரெட் அதாவது சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு விட்டால் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் பகுதிகளில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அர்த்தம். இங்கு மரங்கள் முறிந்து விழும், மின்கம்பங்கள் வேரோடு சாயும். போக்குவரத்து, மின்சாரம், என எல்லாமே துண்டிக்கப்படும். பொதுமக்கள் எந்நேரமும் விழிப்புணர்வுடனேயே இருக்கவேண்டும். இந்த ரெட் அலர்ட்தான் இப்போது தமிழகத்துக்கு வானிலை மையம் விடுத்துள்ளது.

    English summary
    What is red weather alert mean?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X