For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்கு வருவேன், அத்தையின் இடத்தை நிரப்புவேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அரசியலுக்கு நிச்சயம் வருவேன், அத்தை விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவேன் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சசிகலாவுக்கு போட்டியாக கொண்டு வர அதிமுகவில் சிலர் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் தீபா தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

1991ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு வரை நீங்கள் போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்தீர்கள். வாரத்திற்கு இரண்டு முறை கூட சென்றீர்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பாண்டே கூறியதற்கு ஆமாம் ரொம்ப அதிகமாச்சு, அப்படி தான் இருந்துச்சு என்றார் தீபா.

விரிசல்

1995ம் ஆண்டு உங்களுக்கும் போயஸ் கார்டனுக்குமான உறவு இன்னொரு விரிசலை பெரிதாக சந்தித்தது என்று சொல்லலாமா, காரணம் என்ன என்று கேட்டார் பாண்டே. அதற்கு தீபா கூறுகையில், நிச்சயமாக. விரிசலே அப்போது தான் முதன்முதலாக ஏற்பட்டது என்று நான் கூறுகிறேன் என்றார்.

முடிவு

முடிவு

1984ம் ஆண்டில் அப்பா, அம்மாக்கள் எடுத்த முடிவு, 1991ல் இணக்கம் வருது, 1995ல் தான் மனக்கசப்பு வந்தது என்று பாண்டே கூறியதற்கு, மனக்கசப்புகள் அப்போது தான் முதல்முறை ஏற்பட்டன என்றார் தீபா.

காரணம்

காரணம்

திடீர் என்று ஒரு திருமணத்தை அறிவித்தார்கள். அப்போது என்ன நடக்கிறது என்று இவ்வளவு விவரமாக எனக்கு தெரியாது. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஒரு திருமணம் நடக்கிறது என்று மட்டும் புரிந்தது. வளர்ப்பு மகனுக்கு திருமணம் என்று அறிவித்தவுடன் என் தந்தைக்கு கொஞ்சம் கோபம் என்றார் தீபா.

விபரம் தெரியும்

விபரம் தெரியும்

எனக்கு அப்போது விபரம் தெரியும். ஆனால் இவர்களை பற்றி தெரிந்துகொள்ள சந்தர்பம் ஏற்படவில்லை. ஜெயலலிதா சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்த பிறகு தான் முதல் விரிசலே ஏற்பட்டது என்று தீபா கூறினார்.

தீபா

தீபா

நான் பிறந்தபோதே ஜெயலலிதா என்னை வளர்க்க ஆசைப்பட்டார்கள். அவர்கள் என்னை வளர்ப்பு மகளாக அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா போராடி வளர்த்த கட்சி இது. அவரது இடத்தை என்னால் நிச்சயம் நிரப்ப முடியும் என தீபா தெரிவித்தார்.

English summary
Former CM Jayalalithaa's niece Deepa said that she will defintely enter politics and fill the void left by her aunt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X