இந்து மதத்தை பற்றி தவறான கருத்து.. கிலாபத் இயக்கத்துடன் தொடர்பு.. தஞ்சையில் என்ஐஏ அதிரடி சோதனை
கிலாபத் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில், தஞ்சாவூரில் மூவரின் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்: சமூக வலைதளங்களில் இந்து மதத்தை பற்றி தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும், கிலாபத் இயக்கத்துடன் தொடர்புடையதாகவும் சந்தேகத்தின் பேரில் தஞ்சாவூரில் மூவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து மண்ணை பாபா என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல் மகர்நோம்புசாவடி தைக்கால் தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் அப்துல் காதர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முகமது யாசின், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோரது வீட்டில் தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினர்.
சோதனையில் அவர்களிடம் இருந்து மொபைல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் என்ஐஏ அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது யாசின் மற்றும் காதர், அதிகாரிகள் காலை 5.30 மணி போல் வந்து சோதனை செய்தனர். சோதனை செய்வதற்கு அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக கூறினார்கள். மேலும் எதுவும் இங்கிருந்து எடுத்து செல்லவில்லை. தங்களுடைய மொபைல் போன், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டைகளை மட்டும் எடுத்து சென்றனர் என தெரிவித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications