Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்ணை வீட்டில் முகாம்! பரபர ஆலோசனையில் ஓபிஎஸ்! அடுத்தடுத்து காத்திருக்கும் ட்விஸ்ட்! அவரும் வர்றாரா?

Subscribe to Oneindia Tamil

தேனி : சென்னையிலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊரான தேனிக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ள நிலையில் மாலை நேரங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் அவரது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தி வருவதாகவும், சசிகலா டிடிவி தினகரன் தரப்பு நிர்வாகிகள் பலரும் அவருடன் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சில நடவடிக்கைகள் ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தை அளித்துள்ள நிலையில் சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு தனது சொந்த ஊரான தேனீக்கு சென்றுள்ளார் ஓபிஎஸ்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

பெரும்பாலும் பகல் நேரங்களில் பெரிய குளத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் அவர் மாலை நேரங்களில் கைலாச பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு செல்வதாகவும் அங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆதரவாளர்கள் அவரை சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் இன் முன்னாள் ஆதரவாளருமான ஆர்பி உதயகுமார் பேசிய பேச்சுக்கள் ஓபிஎஸ் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு எதிராக மதுரையில் வலுவான அணி ஒன்றை திரட்ட ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறது. இதற்காக மதுரையில் இருக்கும் நிர்வாகிகள் சிலரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் இணைவார்களா என்ற பேச்சு அதிமுக வட்டாரத்தில் அதிகமாக பேசு பொருளாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி வந்த டிடிவி தினகரன் ஓபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளரான சையது கான் நேரில் சந்தித்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை குழப்பத்தில் ஆக்கியது அவர் ஆமுமுகவில் இணைந்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அறிவுறுத்தலின் பேர்தான் டிடிவி தினகரன் சந்தித்ததாக கூறப்படுகிறது.

 சசிகலா, தினகரன் தரப்பு

சசிகலா, தினகரன் தரப்பு

மேலும் தற்போது தேனியில் இருக்கும் ஓபிஎஸ்ஐ சசிகலா மற்றும் தினகரன் தரப்பு நிர்வாகிகள் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தனியாக கட்சி ஆரம்பித்து சமீபத்தில் சசிகலாவுடன் இணைந்த அவரது சகோதரன் திவாகரன் ஓபிஎஸ் தரப்பில் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார் என்கின்றனர் பெரியகுளம் அதிமுகவினர்.

திவாகரன்

திவாகரன்

பொதுவாகவே திவாகரனுக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் கடந்த ஆண்டுகளில் நல்ல நெருக்கம் உள்ளது சசிகலாவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருடன் நல்ல தொடர்பிலிருந்து இருக்கிறார் திவாகரன். ஓபிஎஸ் தரப்புடன் நெருக்கம் காட்டுவது சசிகலா தரப்புக்கு பிடிக்கவில்லை என்பதாலேயே திவாகரன் தனியாக கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வந்ததாகவும் அதன் பின்னரும் தற்போது வரையிலும் ஓபிஎஸ் தரப்புக்கு அவர் நெருக்கமாகவே இருக்கிறார். இந்த நிலையில் தான் சசிகலாவுடன் இணைந்துள்ள திவாகரன் தொடர்ந்து இரு தரப்பின் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் தேனிக்கு வந்தோ அல்லது வேறு இடத்திலோ ஓ பன்னீர் செல்வத்தை சந்திப்பார் என்கின்றனர் அதிமுகவினர்.

 சசிகலாவுடன் சந்திப்பு

சசிகலாவுடன் சந்திப்பு

ஏற்கனவே நான்தான் அதிமுகவின் பொது செயலாளர் என சசிகலா கூறிவரும் நிலையில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சசிகலாவுடன் இணைந்து செயல்பட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கலாம் எனவும் டிடிவி தினகரனுக்கும் குறிப்பிட்ட அளவு ஆதரவு இருப்பதால் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களை எடப்பாடி அணிக்கு எதிராக வலுவான அணி ஒன்றை திரட்டி நெருக்கடி கொடுக்கலாம் எனவும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மீது அதற்கு இருக்கும் தற்போதைய நிர்வாகிகளும் திரட்டி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வகையில் இரண்டு நாட்களில் சென்னை செல்லும் ஓபிஎஸ் அப்போது தினகரன் சசிகலா ஆகியோரை சந்திக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+