திமுக எம்.பி மகன் மீது வழக்குப்பதிவு.. சிக்கிய மணல் 'கடத்தல்' லாரிகள்.. நெல்லையில் ஷாக்!
நெல்லை : நெல்லையில் குவாரி மணல் கடத்தல் தொடர்பாக திமுக எம்.பி ஞானதிரவியத்தின் மகன் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்.பி ஞானதிரவியம் மகன் தினகரன் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மணல் கடத்தல் விவகாரத்தில் ஆளுங்கட்சி எம்.பி மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன்
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சரவணன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டம் முழுவதும் கனிம வளம் கடத்தல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். எஸ்.பி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

திமுக எம்.பி மகன்
இந்நிலையில் நாகர்கோவில் உவரி செல்லும் சாலையில் விஸ்வநாதபுரம் ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அந்த லாரிகளில் எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக கிரசர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த ஜெயபாலன் ஆகிய இருவரையும் கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

எஃப்.ஐ.ஆர் பதிவு
விசாரணையில் அந்த லாரிகள் நெல்லை திமுக எம்.பி ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழவூர் காவல் நிலையத்தில் மூன்றாவது குற்றவாளியாக நெல்லை எம்.பி ஞானதிரவியத்தின் மகன் தினகரனின் பெயரை சேர்த்துள்ளனர்.

தலைமறைவு
தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்த தினகரன் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் தினகரன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. குவாரி மணல் கடத்தல் வழக்கில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நெல்லை எம்.பி ஞானதிரவியத்தின் மகன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ஷாக்
ஏற்கனவே நெல்லை கல்குவாரி விபத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் குவாரிகள் மூடப்பட்ட நிலையில் குவாரிகளை திறக்கச் சொல்லி அமைச்சர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை எம்.பி ஞானதிரவியம் நேரடியாக மிரட்டிய நிலையில், அவர் மகன் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட்










Click it and Unblock the Notifications