திருப்பூர் இனி சர்வதேச ஜவுளி மையம்: 5 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் மத்திய அமைச்சர் கொடுத்த மாஸ் அப்டேட்
திருப்பூர்: திருப்பூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பனியன் மற்றும் ஆயத்த ஆடைத் தொழில்தான்.. இந்த தொழில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல மத்திய அரசு சில முக்கியமான திட்டங்களை தற்போது அறிவித்துள்ளது. இதுதான் திருப்பூர் மக்களுக்கு பூஸ்ட் தந்ததுபோல அமைந்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
நம்முடைய திருப்பூர் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஒரு இடமாக மாறியுள்ளது. திருப்பூரில் தயாராகும் பனியன்கள் மற்றும் உடைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் உடுத்தப்படுகின்றன.

திருப்பூர் மெகா குட் நியூஸ்
இந்தத் தொழிலை இன்னும் பெரிய அளவில் வளர்க்கவும், அதன் மூலம் சாதாரண மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு இப்போது ஒரு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது... நேற்றைய தினம் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. அப்போதுதான் இந்த குட்நியூஸ் முடிவாகி உள்ளது..
அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு முக்கியமான இலக்கை நிர்ணயித்துள்ளார். அதாவது, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் திருப்பூரில் மட்டும் கூடுதலாக ஐந்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்த குட்நியூஸ்..
5 லட்சம் பேருக்கு வேலை
இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது.. இதன் மூலம் திருப்பூரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக அளவில் வேலைகள் கிடைக்கும். வேலைவாய்ப்பு பெருகும்போது ஒட்டுமொத்த நகரத்தின் வருமானமும் அதிகரிக்கும்.
அதேபோல ஏற்றுமதி பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.. நாம் இப்போது எவ்வளவு ஆடைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோமோ, அதை இன்னும் டபுள் மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லி உள்ளது.. . அதாவது 1 கோடி ரூபாய்க்குத் துணிகளை விற்றால், அதை இரண்டு கோடியாக மாற்ற வேண்டும். இதற்காக மத்திய அரசு சில உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது.
ஆன்லைன் கட்டுப்பாட்டு மையம்
அதேபோல ஏற்றுமதி செய்யும் தொழில் அதிபர்களுக்கு பல நடைமுறை சிக்கல்கள் வரும் என்பதால், அவற்றை சரிசெய்ய "ஆன்லைன் கட்டுப்பாட்டு மையம்" என்ற ஒன்றை அரசு தொடங்கப்போகிறது. இதன் மூலம் புகார்களை ஆன்லைனிலேயே தெரிவித்தால், அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். இது தொழில் செய்வோருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய ஸ்வீட் நியூஸ் ஆகும்..
அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது பேச்சில், "இந்தியா இதுவரை 38 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் திருப்பூரின் ஆடை ஏற்றுமதிக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.
பிரகாசமான எதிர்காலம்
வங்கதேசம் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் ஏற்கனவே கொண்டுள்ள ஒப்பந்தங்களால் சில சலுகைகளைப் பெற்று வருகின்றன. இந்தியாவும் விரைவில் இதே போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் 'தாய் ஒப்பந்தங்கள்' என்று போற்றப்படுகின்றன" என்றார்..
அமைச்சர் சொன்னபடி மேற்கண்ட ஒப்பந்தங்கள் முழுமையாக அமலுக்கு வரும்போது, திருப்பூரின் ஜவுளித் தொழில் ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சியை அடையும் .. இதனால் சாதாரண தொழிலாளி முதல் பெரிய முதலாளி வரை அனைவரும் பலன் பெறுவார்கள்.... மொத்தத்தில் திருப்பூரின் எதிர்காலம் மிக பிரகாசமாக உள்ளதாகவே தெரிகிறது...!!!
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications