Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் காங்கேயம் தவெக வேட்பாளர் ஈரோடு மணி பண்ண அந்த காரியம்! தேர்தல் ஆபிஸில் என்ன நடந்தது! உஷார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மணி செய்த ஒரு செயல். இப்போது சோஷியல் மீடியாவில் டாப் நியூஸ் ஆக மாறியுள்ளது.. ஈரோட்டை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் காங்கேயம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.. மனு தாக்கல் முடிந்து வெளியே வந்த நேரத்தில், அங்கே நடந்த ஒரு சம்பவம் தான் இப்போது பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.. அது என்ன தெரியுமா?

தேர்தல் அலுவலக பணியாளர்களுக்கு மதிய சாப்பாடு வழங்கப்படுவதை பார்த்த வேட்பாளர் மணி, அவர்களிடம் மெனு என்ன என்று கேட்டுள்ளார்.. அதற்கு அங்கிருந்தவர்கள் சாதம், சாம்பார், ரசம் மற்றும் பொரியல் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

Kangeyam TVK News Tiruppur Election 2026 Viral Election Video 2026

உடனே மணி, சாப்பாட்டில் இனிப்பு இல்லையா? என்று தனது உதவியாளரிடம் கேட்டுள்ளார்.. அதுமட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுக்கப் பணத்தையும் கொடுக்கச் சொன்னார்.. உடனே அந்த உதவியாளர் 2500 ரூபாயை எடுத்து அங்கிருந்த அலுவலக பணியாளரிடம் கொடுத்து எல்லாரும் ஸ்வீட் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு போனாராம்.

பரிசு பொருட்கள் செக்கிங்

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு காசு அல்லது பரிசு பொருட்கள் கொடுக்கிறார்களா என்று பறக்கும் படை மற்றும் துணை ராணுவத்தினர் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், தேர்தல் அலுவலகத்திலேயே வைத்து தவெக நிர்வாகிகள் பணம் கொடுத்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் அந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட காட்சிகளும் வீடியோவாக வெளியாகி இப்போது வைரலாகி வருகிறது.. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதால் டிராபிக் ஜாம் போல புகார்கள் குவிய தொடங்கி உள்ளதாம்..

இது ஒருபுறம் இருக்க, கட்சி தலைமைக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் என்ற பயமும் வேட்பாளர் தரப்பில் உள்ளதாகச் சொல்கிறார்கள்..

பாலியல் புகார்

இந்த பரபரப்புக்கு நடுவில், பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கும் இப்போது கோர்ட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.. ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் நிர்வாகியிடம் பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த வாரம் புகார் கிளம்பியது.

இந்த வழக்கில் அவருக்கு ஏற்கனவே கோர்ட் முன் ஜாமீன் கொடுத்திருந்தது.. ஆனால் பிரகாசத்துக்குக் கொடுக்கப்பட்ட அந்த முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் இப்போது சென்னை ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.. இதனால் பிரகாசத்துக்குச் சிக்கல் அதிகரித்துள்ளது..

தவெகவில் தொடர் சலசலப்பு

முன்னதாக தனக்கு எதிராகப் புகார் வந்ததும் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஜெயில் பயம் காரணமாகப் பிரகாசம் முன் ஜாமீன் வாங்கியிருந்தார்.. ஆனால் அந்த பெண் இப்போது விடாப்பிடியாகக் கோர்ட்டை நாடியுள்ளதால் அந்த ஜாமீன் ரத்தாக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

கட்சிக்குள்ளேயே இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுவது தவெக தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த 2 சம்பவங்களும் தற்போது அரசியலில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.. அடுத்த 10 நாட்களில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. அதனால் தேர்தல் களம் இப்போது செம சூடாகவே இருக்கிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+