Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாங்குற சம்பளத்தில் நயா பைசா தொடுவதில்லை! வேறு என்ன செய்கிறார்.. வியக்க வைக்கும் திமுக எம்.எல்.ஏ.!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சட்டமன்ற உறுப்பினருக்கான மாத ஊதியத்தில் ஒரு பைசா கூட தொடாமல் அதனை அப்படியே ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவுக்காக வழங்கி வருகிறார் திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ்.

ஒரு மாதம் இரண்டு மாதம் என்றால் பரவாயில்லை, ஆனால் கடந்த 16 மாதங்களாக தனது மாத ஊதியம் முழுவதையும் கல்விக் கட்டணத்திற்காக கொடுத்து உதவுகிறார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ.

இதன் காரணமாகவே இவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கல்விக் கட்டணம் கட்ட உதவிக் கேட்டு எப்போதுமே மாணவர் பட்டாளத்தின் கூட்டம் அலைமோதும்.

திருச்சி கிழக்கு

திருச்சி கிழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த இனிகோ இருதயராஜ். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்ற பெயரில் தனி அமைப்பு நடத்தி வந்தாலும் கூட, இவர் திமுக எம்.எல்.ஏ.வாகவே அறியப்படுகிறார். இவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு யார் வருகிறார்களோ இல்லையோ ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கட்ட உதவிடுமாறு வந்து செல்கிறார்கள்.

மிகுந்த கவனம்

மிகுந்த கவனம்

இவ்வாறு கல்விக் கட்டணம் கட்ட உதவிக் கேட்டு வரும் மாணவர்களின் விவரங்களை ஏனோ தானோ என்று பார்க்காமல் மிகுந்த கவனம் செலுத்தி தாமே நேரடியாக பார்த்து அவர்களுக்கான தொகையை தனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தில் இருந்து பிரித்துக் கொடுக்கிறார். மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறையோ மொத்தமாக சேர்த்து வைத்து எம்.எல்.ஏ. பதவிக்கான சம்பளத்தில் இருந்து இந்த உதவியை செய்து வருகிறார் இனிகோ இருதயராஜ்.

மாணவர் பட்டாளம்

மாணவர் பட்டாளம்

இனிகோ இருதயராஜ் ஊரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வருகிறார் என்றாலே அங்கு மாணவர்களும், பெற்றோர்களும் பெருமளவில் திரண்டு விடுகிறார்கள். இதுவரை 12 லட்ச ரூபாயை கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக கொடுத்து உதவியிருக்கிறார் இவர். தற்போது கூட இரண்டாம் பருவக் கட்டணத்திற்கு உதவுமாறு ஏராளமானோர் இனிகோ இருதயராஜ் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர்.

ஆயத்த ஆடை

ஆயத்த ஆடை

இனிகோ இருதயராஜை பொறுத்தவரை ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் செய்வதால் சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை நம்பி அவர் இல்லை. இதன் காரணமாகவே இவ்வளவு தாராளம் காட்டுகிறார். அரசியலில் கிடைத்த வரை லாபம் என சுருட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இவர் போன்ற வியக்க வைக்கும் அரசியல்வாதிகளும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+