திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ.. திண்டிவனத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஸ்டாலின்!
விழுப்புரம்: திண்டிவனம் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹரிதாஸ் திமுகவில் இணைந்துள்ளார். திண்டிவனம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஹரிதாஸ், திமுக இணைந்திருக்கிறார். மருத்துவரான ஹரிதாஸ், 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பாக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ-வாக வெற்றிபெற்றவர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அரசியல்வாதிகள் கட்சித் தாவல்களை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், தவெகவில் இருந்து அதிமுகவிற்கும் சிலர் தாவியுள்ளனர். அதேபோல் அமமுகவில் இருந்து விலகி திமுக மற்றும் அதிமுகவில் பலரும் இணைந்து வருகின்றனர். அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் திமுக, தவெக மற்றும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

அந்த வகையில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், பாலகங்காதரன், அமமுகவின் மாணிக்க ராஜா, மநீம கூட்டணியில் இருந்த பிடி செல்வக்குமார், முன்னாள் எம்பி மைத்ரேயன், மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்தப் பட்டியலில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹரிதாஸ் இணைந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொள்ளாரில் முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவின் போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹரிதாஸ் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மருத்துவரான ஹரிதாஸ், 2011ஆம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
2011ஆம் ஆண்டு திண்டிவனம் தொகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சிவி சண்முகம் அங்கிருந்து மாற்றம் அடைந்தார். இதையடுத்து சிவி சண்முகம் இடத்தில் ஹரிதாஸ் போட்டியிட்டு வென்றார். வட மாவட்டங்களில் திமுக வலிமையாக இருந்து வரும் சூழலில், தற்போது அதிமுக முன்னாள் நிர்வாகிகளும் திமுகவில் இணைந்து வருவது வலிமையை அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications