இந்தியாவுக்கு மேலும் 25% வரியை நீக்கிய டிரம்ப்.. ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு போடப்பட்ட அபராத வரி ரத்து
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்தார். இந்த வரி தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பரஸ்பர வரியில் 7 சதவீதம் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அமெரிக்கா நமக்கு விதித்த 50 சதவீத வரி இப்போது வெறும் 18 சதவீதமாக சரிந்துள்ளது. இது நம் நாட்டின் வர்த்தகர்களை ஹேப்பியாக்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அமெரிக்காவின் பொருட்களுக்கு நம் நாடு அதிகப்படியான வரி விதிப்பதாக குற்றம்சாட்டி பரஸ்பர வரியாக 25 சதவீதமும், அதன்பிறகு உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று 50 சதவீத வரியை விதித்தார்.

இழுபறிக்கு முடிவு
இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெரிதும் தடைப்பட்டது. வர்த்தகர்கள் அதிகளவில் பாதிப்பை எதிர்கொண்டனர். மேலும் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பிரச்சனை வெடித்தது.
இதையடுத்து பிரச்சனையை தீர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடங்கியது. பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இழுபறி நீடித்து வந்தது. இப்போது இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18% வரி குறைப்பு
இந்நிலையில் தான் கடந்த 2ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் உறுதியானது. இதன்மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு கூடுதலாக அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தையும் நீக்க அமெரிக்க அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகை உறுதியளித்தது.
ரஷ்யா ஆயில் வரி ரத்து
இந்நிலையில் தான் தற்போது அந்த அபராத வரி 25 சதவீதமும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் நம் நாட்டுக்கு அமெரிக்க விதித்த 50 சதவீத வரி என்பது இப்போது வெறும் 18 சதவீதமாக குறைந்துள்ளது.
இது நம் நாட்டின் வர்த்தகர்களுக்கு குட்நியூஸாக அமைந்துள்ளது. ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரியால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்றுமதி மளமளவென சரிந்தது. ஆனால் இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.
ரஷ்யாவை கைவிடும் இந்தியா?
இருப்பினும் இந்த வரி குறைப்பு நடவடிக்கை என்பது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்ற அடிப்படையில் தான் டிரம்ப் குறைத்துள்ளார். ரஷ்யா என்பது நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடு. தற்போது அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் தான் அதற்கு முக்கிய காரணம். இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது அந்த நாட்டின் நிதி நிலைமைக்கு கைக்கொடுத்தது.
இப்போது டிரம்பின் வரி குறைப்பை நாம் தொடர்ந்து பெற வேண்டும் என்றால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட வேண்டும். இது நம் நாட்டை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. இதனால் இந்த விஷயத்தில் இந்தியா என்ன செய்யும்? ரஷ்யாவை கைவிடுமா? இல்லாவிட்டால் அமெரி்காவை வேறு வகையில் சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications