"32% வரி கட்".. இந்தியாவுக்கு என்னென்ன லாபம்? அமெரிக்கா வர்த்த ஒப்பந்தத்தின் ‛டாப்’ 10 பாயிண்ட்
வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் நம் நாட்டுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியில் 32 சதவீதம் குறைககப்பட்டு வெறும் 18 சதவீதமாக நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா - அமெரிக்கா இடையேயான இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள 10 முக்கிய பாயிண்டுகளை இங்கு பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி சரிந்தது. தற்போது இருநாடுகள் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக இடைக்கால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா, அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10 முக்கிய அம்சங்களை இங்கு பார்க்கலாம்.

18% வரி குறைப்பு
* இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் வழியாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரிகள் 50 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியை டிரம்ப் நீக்கி உள்ளார். இதனால் இந்தியாவிற்கான வரி 32 சதவீதம் குறைக்கப்பட்டு 18 சதவீதமாக இருக்கும்.
தானியங்கள் - பழங்கள்
* அமெரிக்காவின் அனைத்து தொழில்துறை பொருட்கள், உலர் தானியங்கள், கால்நடை தீவனத்துக்கான சிவப்பு சோளம், கொட்டை வகைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது.
அதேபோல் சோயா எண்ணெய், ஒயின், மதுபானங்கள் உட்பட அமெரிக்காவின் பல விவசாய மற்றும் உணவு பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கும் அல்லது நீக்கும்.
ஜவுளி - தோல் - ரப்பர்
* ஜவுளி, ஆயத்த ஆடை, தோல், காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சில இயந்திர வகைகள் உட்பட இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 18 சதவீதம் வரி விதிக்கும்.
மருந்து - வைரங்கள்
* இடைக்கால ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் போது, மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் விமான பாகங்கள் உட்பட பல இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவரும்.
விமான பாகங்கள்
* இந்தியாவில் இருந்து செல்லும் சில விமானங்கள் மற்றும் விமான பாகங்களுக்கான வரிகளையும் அமெரிக்கா நீக்கும்.
வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் வரி அல்லாத மற்ற தடைகளையும் நீக்கும் முறையை இரு நாடுகளும் எளிதாக்கும்.
* அமெரிக்க மருத்துவ சாதனங்களுக்கான நீண்டகால தடையை இந்தியா சரிசெய்யும்.
உணவு - விவசாய பொருட்கள்
* அமெரிக்க தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பொருட்களுக்கான இறக்குமதி மற்றும் உரிம விதி கட்டுப்பாடுகளை இந்தியா ரத்து செய்யும்.
* அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்களை பாதிக்கும் நீண்டகால வரி அல்லாத தடைகளையும் இந்தியா நிவர்த்தி செய்யும்.
ரூ.45 லட்சம் கோடி
* .அடுத்த 5 ஆண்டுகளில், விமானம், விமான உதிரி பாகங்கள், உலோகங்கள், நிலக்கரி என பல்வேறு துறைகளில் 500 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சம் கோடி) அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
* அமெரிக்காவின் இந்திய பொருட்களுக்கான சந்தையையும், இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கான சந்தையையும் திறப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் முழுமையான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்.
அந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியப் பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பது குறித்த இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலிக்கும் என்று முக்கிய பாயிண்ட்டுகள் இருநாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications