"இவங்க" எல்லாம் இனி அமெரிக்காவில் கால் வைக்க முடியாது! டிரம்ப் போட்ட தடையால் இந்தியாவுக்கு பாதிப்பு?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அறிவித்த பயணத் தடை கடந்த வாரம் அமலுக்கு வந்தது. இதனால் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனிமேல் அமெரிக்காவில் காலடி எடுத்து வைக்க முடியாது.. டிரம்ப்பின் இந்தத் தடையால் எந்த நாட்டினரும் அமெரிக்கா செல்ல முடியாது.. இதனால் இந்தியர்களுக்குப் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்க அதிபரான பிறகு கடந்த ஓராண்டாக டிரம்ப் ஏகப்பட்ட பயணத் தடைகளை விதித்து வருகிறார். இதனால் வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டே போகிறது. அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர் கூட பயந்து பயந்தே இருக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

டிரம்ப்
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார். கடந்த வியாழன் அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வந்தது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் நீண்ட கால விசா மட்டுமின்றி, குறுகிய கால விசாவை கூடப் பெற முடியாது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நாடுகள்
அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை இது தொடர்பான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பர்கினா பாசோ, லாவோஸ், மாலி, நைஜர், சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிசம்பர் 29ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி நிரந்தரக் குடியுரிமை கோருபவர்கள், தற்காலிக விசா கோருவோர் என இரு தரப்புமே இதனால் பாதிக்கப்படுவார்கள்.
என்ன காரணம்
அமெரிக்காவின் தேசிய, பொதுப் பாதுகாப்புக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அவசியம் என வெள்ளை மாளிகை தெரிவிக்கிறது. உதாரணமாக, பர்கினா பாசோவில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்று அவை அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடாது என்றே தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டு அமைதியின்மை காரணமாகச் சொல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு காரணம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தாண்டியும் வேறு சில நாட்டினருக்கும் அமெரிக்காவில் நுழைய ஏற்கனவே தடை இருந்தது. ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய நாட்டினர் அமெரிக்காவில் நுழைய ஏற்கனவே தடை இருந்தது. அத்தோடு இந்த ஏழு நாடுகளும் இப்போது இணைந்துள்ளன. இது தவிர வெனிசுலா, கியூபா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பகுதி அளவில் கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்குப் பாதிப்பு?
அதேநேரம் இந்த புதிய தடையால் எந்த விதத்திலும் இந்தியா பாதிக்கப்படவில்லை. இந்த ஏழு நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விசா கோரி விண்ணப்பிக்க முடியாது. இதர நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. அதேநேரம் ஏற்கனவே டிரம்ப் அறிவித்துள்ள H-1B விசா தொடர்பான கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் வழங்கப்படும் ஹெச்-1பி விசாவில் 70% இந்தியர்களுக்கே செல்லும் நிலையில், இதர தடைகளால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே, டிரம்பின் சோஷியல் மீடியா கண்காணிப்பு தடைகள் காரணமாக இந்தியர்கள் ஹெச்-1பி விசா விண்ணப்பங்கள் தாமதமாகியுள்ளன. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பல ஆயிரம் இந்தியர்கள் விசா நேர்காணலுக்குக் காத்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் நடைபெற இருந்த பல நேர்காணல்கள் மாதக் கணக்கில் தள்ளிப் போய் இருக்கிறது. நிலைமை மோசமாக இருப்பதால் அமேசான் நிறுவனம் தனது இந்திய ஊழியர்கள், வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications