ரொம்ப மோசம்! இது 75 ஆண்டு இல்லாததது! அக்னிபாத்தில் அமைதி காக்கும் மோடியை விளாசிய காங்கிரஸ்
டெல்லி: ‛‛இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அதாவது மத்திய பாஜக அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் போராட்டம்
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்தே அறிக்கையை வெளியிட்டார். மேலும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ப சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்கள் அக்னிபாத் திட்டத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி தர்ணா நடந்தது. இன்றும் இது தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மல்லிகார்ஜூன கார்கே
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் முப்படையில் பணியாற்றும் அதிகாரிகள் அரசின் கொள்கை முடிவுகளை பாதுகாக்க முன்நிறுத்தப்படுவது இதுதான் முதல் முறை. இத்திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாய் திறக்காதது ஏன்?'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்?
அதாவது அக்னிபாத் போராட்டம் நடக்கும் நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினர். நேற்றைய ஆலோசனைக்கு பிறகு பாதுகாப்புத்துறையின் உயரதிகாரிகளான ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி, விமானப்படை சார்பில் ஏர்மார்ஷல் எஸ்கே ஷா உள்ளிட்டவர்கள் நிருபர்களை சந்தித்து பேசினர்.

விளக்கமளிக்கும் அதிகாரிகள்
இந்த வேளையில் 3 பேரும் அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்படாது என கூறியதோடு, கடற்படை, விமானப்படையில் அக்னிவீரர்கள் சேர்ப்புக்கான தேதியை அறிவித்தனர். மேலும் முப்படை தலைமை தளபதிகளும் தனித்தனியே அக்னிபாத் திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். இதனால் தான் அரசின் திட்டம் தொடர்பான கொள்கை முடிவை முழுமையாக செயல்படுத்த முப்படை அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
-
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு!












Click it and Unblock the Notifications