Durandhar: நெட்ஃப்ளிக்ஸை கலக்கிய ‘துரந்தர்’ – பாகிஸ்தானிலும் டாப் 1, ரன்வீர் சிங்கின் படத்துக்கு உலகளாவிய வரவேற்பு
சென்னை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' திரைப்படம், இப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகம் முழுக்க பேசப்படும் படமாக மாறி இருக்கிறது. கடந்த ஜனவரி இறுதி வாரத்தில் வெளியான நெட்ஃப்ளிக்ஸ் வாராந்திர தரவரிசைப் பட்டியலின்படி, ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான உலகளாவிய லிஸ்ட்டில் 'துரந்தர்' நேரடியாக முதலிடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது. சுமார் 7.6 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த படம், ஓடிடி உலகில் ஒரு பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தானிலும் டாப் 1
இந்தப் படத்தின் வெற்றி இந்திய ரசிகர்களை மட்டுமல்ல, அண்டை நாடுகளிலுள்ள பார்வையாளர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 பட்டியலில் 'துரந்தர்' முதலிடத்தை பிடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், கதையின் ஒரு பகுதியை பாகிஸ்தானின் லியாரி நகரை பின்னணியாக வைத்து காட்டுகிறது. இந்திய படங்கள் பாகிஸ்தானில் திரையரங்குகளில் வெளியாகாத சூழலில் கூட, டிஜிட்டல் தளத்தில் அந்நாட்டு மக்கள் இந்த படத்தை அதிகமாக பார்த்து வருவது தான் இப்போ சினிமா வட்டாரத்தில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறி இருக்கிறது.
துரந்தர் சாதனை
'துரந்தர்' கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, உலகம் முழுக்க சுமார் 1,300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய வெற்றியை பதிவு செய்தது. தியேட்டரில் நல்ல வசூல் அடித்த பிறகு, ஜனவரி 30 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் தொடங்கியது. ஓடிடியில் வெளியான சில நாட்களிலேயே இவ்வளவு பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி, உலகளாவிய பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது தான் இந்த படத்தின் உண்மையான ரீச் எவ்வளவு பெரியது என்பதை காட்டுகிறது.

துரந்தர் ஓடிடி ட்ரெண்டிங்
படத்தில் ரன்வீர் சிங் ஒரு தீவிரமான, தேசபக்தி கலந்த ஆக்ஷன் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, வில்லன் மற்றும் கிரே ஷேட் கேரக்டர்களில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வலு சேர்த்ததாக ரசிகர்கள் சொல்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகள், இன்டென்ஸ் பின்புல இசை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மையமாக வைத்த திரைக்கதை - இந்த எல்லாம் சேர்ந்து 'துரந்தர்'யை ஒரு 'பக்கா' ஆக்ஷன் த்ரில்லராக மாற்றி இருக்கிறது.
மேலும், வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. சவூதி அரேபியாவில் கூட டாப் 10 லிஸ்ட்டில் ஆறாவது இடம் பிடித்து இருக்கிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய ஆக்ஷன் படங்களுக்கு இருக்கும் ரசிகர் வட்டாரம் இன்னும் வலுவாகி வருவதை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில், தியேட்டரில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை, அதற்கு பிறகு ஓடிடியில் உலகளாவிய ட்ரெண்டிங் - இரண்டையும் ஒரே நேரத்தில் அடித்திருக்கும் படம் என்ற வகையில் 'துரந்தர்' தனி இடம் பிடித்துள்ளது. ரன்வீர் சிங்கின் கரியரில் இன்னொரு முக்கிய மைல் ஸ்டோன் என்று இந்த வெற்றியை சொல்லலாம். இனி வரும் நாட்களில் இந்த படம் எவ்வளவு நாட்கள் ட்ரெண்டிங் லிஸ்ட்டில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்கிறது என்பதையும் ரசிகர்கள் ஆர்வமாக கவனித்து வருகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications