To Start receiving timely alerts please follow the below steps:
- Click on the Menu icon of the browser, it opens up a list of options.
- Click on the “Options ”, it opens up the settings page,
- Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
- Scroll down the page to the “Permission” section .
- Here click on the “Settings” tab of the Notification option.
- A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
- Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.
அவியினும் வாழினு மென்
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
— மு. வரதராசன்
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்
— கலைஞர்
செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?
— சாலமன் பாப்பையா
கேள்வியாகிய அறிவுச் சுமையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்
— புலியூர்க் கேசிகன்
செவியில் சுவையை அறியாது வாய் உணர்வு விரும்பும் மானிட பதர்கள் அழிந்தால் என்ன? அல்லது வாழ்ந்தால் என்ன?.
— சிவயோகி சிவகுமார்
செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
— மணக்குடவர்
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன? (செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
— பரிமேலழகர்
His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live?.
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?.
seviyiR suvaiyuNaraa vaayuNarvin maakkaL
aviyinum vaazhinum en