தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா..நோய் தீர்க்கும் ஔஷதம் பெற அழைப்பு
ராணிப்பேட்டை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணிக்கு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர்கள் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 வாழைப்பழங்கள்,1008 வடை,1008 ஜாங்கிரிகள், 1008 வெற்றிலை, 1008 எழுமிச்சை பழங்கள் அடங்கிய மாலைகள் அணிவிக்கப்பட்டு , துளசி மற்றும் வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற உள்ளது.

உலகிலேயே சைவம்,வைணவம்,ஸ்ரீசாக்தம்,சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஷண்மதத்திற்குரிய அனைத்து தெய்வ சந்நிதிகளும், நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்களும், எண்ணற்ற மகான்களும் பரிபூரணமாக பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஆகும்.
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூன்று நாட்கள் முத்தான அபிஷேகங்களும், ஔஷதமும் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
இதன்படி வருகிற 22ம்தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு, வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகதலிங்கேஸ்வரருக்கு , 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் , கலச அபிஷேகம் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
வருகிற 23ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணிக்கு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர்கள் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 வாழைப்பழங்கள்,1008 வடை,1008 ஜாங்கிரிகள், 1008 வெற்றிலை, 1008 எழுமிச்சை பழங்கள் அடங்கிய மாலைகள் அணிவிக்கப்பட்டு , துளசி மற்றும் வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற உள்ளது.
அதே போல் வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு திருவோண நட்சத்திரத்தில், மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு , வேறு எங்கும் காணாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் ஔஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது. இந்த அபிஷேக பிரசாதங்கள் பக்தர்களின் பிணிகளை தீர்க்கவல்லது எனவும் , எனவே இந்த முத்தான மூன்று அபிஷேகம், பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று பிரசாதங்களை ஔஷதமாக பெற்று தங்கள் நோய் மற்றும் பிணிகளை தீர்த்து பயன்பெறுமாறும், தெய்வங்களின் ஆசியும் பெற்று பயனடையுமாறு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று டிசம்பர் 19ம்தேதி ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகளுடன் , அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் பல்வேறு வகையான ஹோம பூஜைகள் மார்கழி அமாவாசை முன்னிட்டு நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications