Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்..தீராத கடனும் கண்ணுக்கு தெரியாமல் கரைந்து போகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. அதாவது நாம் நம்முடைய முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பலனுக்கு ஏற்பவே மீண்டும் மீண்டும் மனிதப் பிறப்பெடுத்து முந்தைய பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை அனுபவித்துக்கொண்டு அல்லல் படுகிறோம். நாம் என்னதான் தினந்தோறும் கடவுளை விழுந்து விழுந்து கும்பிட்டாலும், முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினையை இந்த ஜென்மத்தில் வட்டியோடு அனுபவித்து தான் ஆகவேண்டும் என்பது நம் தலைவிதி. அதில் ஒன்று தான் நம்மை இந்த ஜென்மத்தில் விடாது கருப்பாக துரத்திக்கொண்டிருக்கும் கடன் பிரச்சனை. காலை சுற்றிய பாம்பாக கடும் சிக்கலை ஏற்படுத்தி வரும் கடன் பிரச்சினை தீர செய்ய வேண்டிய பரிகாரங்களைப் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு மனிதனாலும் கடன் வாங்காமல் காலத்தை தள்ள முடியாது. அவ்வளவு ஏன் நம்மைப் படைத்த கடவுளே கடன் வாங்கிக் கல்யாணம் செய்துவிட்டு, தினந்தோறும் அந்தக் கடனுக்கு வட்டி செலுத்திக்கொண்டிருக்கிறார். அதே போல் அனைத்து நாடுகளுமே கடன் வலையில் சிக்கித் தவித்து வருகின்றன. கடன் வாங்கினாலும் அதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறோம். இதைத் தான் அன்றைய பெரியோர்கள், பசியோடு தூங்கினாலும் பரவாயில்லை, ஆனால் கடனோடு தூங்கச் செல்லாதே. உன்னால் நிம்மதியாக தூங்க முடியாது என்று.

ருணம், ரோகம் சத்ரு இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு வரக்கூடாது. ருணம் என்றால் கடன், ரோகம் என்றால் நோய் சத்ரு என்றால் எதிரிகள். ஏழைகளுக்கு ஆயிரக்கணக்கில் கடனும் கோடீஸ்வரர்களுக்கு கோடிக்கணக்கில் கடனும் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு கடன் இருந்தால் தூக்கம் வராது. ஒரு சிலருக்கு கடன் இல்லாவிட்டால் தூக்கம் வராது. கடனே வாங்காமல் சிலர் குடும்பம் நடத்தி பழகிக்கொள்வார்கள். சிலரோ கடனை உடனை வாங்கியாவது ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துவார்கள் காலத்திற்கும் இஎம்ஐ கட்டிக்கொண்டிருப்பார்கள்.

கடன் பிரச்சினை

கடன் பிரச்சினை

ஒரு சிலருக்கு கடன் என்பது கால் முட்டி அளவிற்கு, அதாவது வருமானத்தில் கால்வாசி பங்காக கடன் இருக்கும். வேறு சிலருக்கு, வருவாயில் பாதியளவு கடன் இருக்கும். இன்னும் பல பேர்கள்களுக்கு வருமானத்தை விட கடன் தொகையின் அளவோ பல மடங்காக இருக்கும். அதனால், மாதம் பிறந்த உடன் வரும் சம்பளத்தை முழுவதும் கடனுக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வெறும் கவரோடு வந்துவிட்டு கையை பிசைந்து கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால், புதிதாக இன்னொரு கடன் வாங்குவார்கள். இப்படி கடனுக்கு மேல் கடனாக அடுக்கிக்கொண்டே போவதுண்டு.

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

கடன் பிரச்சனை என்பது ஒரு மனிதனை நிம்மதியாக வாழவிடாது. இந்தக் கடன் பிரச்சனையோல் எத்தனையோ பேர்கள் தன்னுடைய மானம், மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்து கொள்வதும், இன்னும் சில பேர், கடன் தொல்லையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஊரை விட்டும், நாட்டை விட்டும் ஓடிச்சென்று தலைமறைவாகிவிடுவதும் வாடிக்காயாகிவிட்டது. நம்மை ஆட்டிப்படைக்கும் கடன் பிரச்சனையை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரும் சக்தி, நம்முடைய குலதெய்வத்திற்கே உண்டு. இன்னும் சிலருக்கு கடன் பிரச்சனை தீராமல் இழுத்துக்கொண்டே போவதற்கும் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிட்டதாலும் கூட இருக்கலாம். எனவே, இந்த கடன் பிரச்சினை விரைவில் தீர, தொடர்ந்து மூன்று பௌர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.

நெய் தீபம்

நெய் தீபம்

ஒரு சிலருக்கு குலதெய்வம் இருக்கும் ஆலயம், வெகு தொலைவில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பவுர்ணமிகள் செல்ல இயலாத நிலை இருக்கும். அது போன்ற சமயங்களில் ஒரு சில பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள், அதன் முன்பாக ஐந்துமுக விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவரிகளின் குடும்ப வழக்கப்படி குலதெய்வத்திற்கு படையல் இட்டு வழிபட வேண்டும்.

குல தெய்வத்திடம் பிரார்த்தனை

குல தெய்வத்திடம் பிரார்த்தனை

கடன் பிரச்சினைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பௌர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால், கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வப் படம் வீட்டில் இல்லாதவர்கள், குலதெய்வக் கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம்.

சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு

இயற்கை தெய்வம் சூரியன். தினமும் சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். அதே போல கடன் பிரச்சினையும் நீங்கும். சூரிய பகவான் வெற்றியின் கடவுள். 'ஓம் ஆதித்யாய நமஹ' என்ற மந்திரம் கூறி செம்பருத்தி பூக்களால் சூரியனை வழிபட வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினையும் நீங்கும்.

வியாழக்கிழமை பரிகாரம்

வியாழக்கிழமை பரிகாரம்

வளர்பிறை வியாழக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்து குரு பகவானை வணங்க செல்வம் அதிகரிக்கும் கடன் பிரச்சினை நீங்கும். அதே போல சனிக்கிழமைகளில் கருப்பு நிற நாய்க்கு உணவு அளிக்கலாம். தேங்காயும் வெல்லமும் கலந்து பசுவிற்கு தர கடன் பிரச்சினை நீங்கும்.

வெற்றிலை பாக்கு பரிகாரம்

வெற்றிலை பாக்கு பரிகாரம்


கடன் பிரச்சினை தீர இன்னும் சில பரிகாரங்களும் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.

கல் உப்பு பரிகாரம்

கல் உப்பு பரிகாரம்

அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை குளித்து பூஜைகள் செய்து முடித்துவிட்டு, அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். வளர்பிறையில் வரக்கூடிய திருதியை அன்று அன்னதானம் செய்தாலும் கடன் பிரச்சினை மற்றும் பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதை ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.

கடன் தீர்க்கும் குளிகை காலம்

கடன் தீர்க்கும் குளிகை காலம்

குளிகை காலம் இது காரியசித்திக்கு ஏற்ற நேரம். இந்த நேரத்தில் செய்யத் தொடங்கும் செயல்கள் திரும்ப திரும்ப நடைபெறும். குளிகை காலத்தில் ஈமச்சடங்கு செய்ய மாட்டார்கள். நகை அடகு வைப்பதோ, படம் கடன் வாங்கவோ மாட்டார்கள். மாறாக கடன் திரும்ப கொடுக்கலாம். அடகு வைத்த நகையை திருப்பலாம்.

 கடன் பிரச்சினை தீர்க்கும் சனிபகவான்

கடன் பிரச்சினை தீர்க்கும் சனிபகவான்

கடனிலிருந்து விடுபட தொடர்ந்து பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும். சனீஸ்வர பகவானை வழிபடுவது கடன் பிரச்சினையை தீர்க்கும். கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.

கடனை அடைக்க உகந்த நாட்கள்

கடனை அடைக்க உகந்த நாட்கள்

மைத்ர முகூர்த்த நாட்களில் கடனை அடைக்கலாம். அக்டோபர் மாதத்தில் 24.10.2022 திங்கட்கிழமை காலை 08:37 முதல் 10:49 வரை மைத்ரேய முகூர்த்தம் உள்ளது. நவம்பர் மாதத்தில் 06.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 06:51 முதல் 09:02 வரை கடன் அடைக்கலாம். 17.11.2022 வியாழக்கிழமை மதியம் 03:42 முதல் மாலை 05:30 வரை கடன் அடைக்க உகந்த நேரமாகும். அதே போல டிசம்பர் மாதத்தில் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 05:01 முதல் 07:12 வரையும், 14.12.2022 புதன்கிழமை மதியம் 01:56 முதல் 03:43 வரையும், 31.12.2022 சனிக்கிழமை காலை 03:16 முதல் 05:26 வரையிலும் கடன் அடைக்க உகந்த நாட்களாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+