என் குழந்தைக்கு அப்படித்தான் சொல்லி வளர்க்கிறேன்...ஆரியின் அசத்தல் அட்வைஸ்
சென்னை: குழந்தைகளை வளர்ப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு ஆரி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்க வேண்டும் என்ற ஆரியின் அட்வைஸ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக கருத்துக்கள் பேசிய ஆரியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரியாலிட்டி ஷோவில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுவரைக்கும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருசில போட்டியாளர்கள் தான் ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்துள்ளனர். அதில் ஆரியும் ஒருவர். ஆரி எனும் பெயரைக் கேட்டதும் ரசிகர்களில் மத்தியில் தனி பிரகாசமாக ஆரி தெரிகின்றாராம். இவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துக்கொண்டார்.

திருப்புமுனையான நெடுஞ்சாலை
சங்கர் தயாரித்த ரெட்டைசுழி திரைப்படத்தில் அறிமுகமான ஆதி நெடுஞ்சாலை என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அப்படியே கிராமத்து நபராக பட்டையை கிளப்பியிருக்கிறார். இவருடைய பேச்சு நடை நடிப்பு அனைத்தும் ஒரு கரடுமுரடான டிரைவரை போலவே அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாயா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத நேரத்தில் தான் இவருக்கு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பிக்பாஸ் நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இவர் வெற்றி கோப்பையை தட்டி விட்டார். நான்காவது சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் இவருக்கு எதிராக குரல் கொடுத்து இவரிடம் பிரச்சனைகளை தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் இவர் தனியாக அனைவரையும் சமாளித்துக் கொண்டு இருந்ததை பார்த்து இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் பெருக தொடங்கிவிட்டனர். தன்னுடைய கருத்தை எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காமல் உறுதியாக இருந்தது அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதனால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் பலர் இவரை மிஸ் பண்ணி வருகின்றனர்.

ஆரியின் அறிவுரை
ஒரு சமூக ஆர்வலராகவும், தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் விவசாயத்திற்கு ஆதரவளிக்கும் ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளர். எந்த நிலையில் தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு வீட்டில் பெற்றோர்களின் வளர்க்கும் விதத்தில் தான் இருக்கிறது. பெண் குழந்தைகளை நீ ஆண் குழந்தையைப் போல ஏன் அழுகிறாய் என்று கேட்க வேண்டும் பெண்கள். பெண்கள் என்றாலே அழுது தீர்ப்பவர்கள் என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும். வீட்டில் குழந்தைகளை தைரியமாக வளர்க்கும்போது அந்தக் குழந்தை வெளியேயும் தைரியமாக இருக்கும் என்று பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். நான் என் குழந்தையிடம் அப்படிதான் சொல்லி வளர்க்கிறேன் என்று ஆரி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications