10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!
சென்னை: மலையாளத்திலும் தமிழிலும் பரிச்சயமான நடிகராக இருக்கும் பாலா, சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக திரையில் மாஸ், ஆக்ஷன், வில்லத்தனம் என பல முகங்களில் தெரியும் நடிகர் பாலா, இந்த முறை முற்றிலும் உடைந்த மனநிலையில் பேசியிருப்பது பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
"இதற்கு மேல் என்னால் முடியவில்லை... உண்மை வெளியில் வரக்கூடாதென்றால் விஷம் வைத்து என்னையும் என் மனைவியையும் கொன்றுவிடுங்கள்" என்று அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உடைந்து பேசிய பாலா
இன்ஸ்டாகிராமில் நடிகர் பாலா பகிர்ந்த வீடியோவில் மலையாளத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார், கடந்த 10 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் சந்தித்த மனவேதனைகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
"நான் படித்த காலத்தில் இருந்த வாழ்க்கை வேறு. இப்போது என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நான் மிகப்பெரிய வேதனையை அனுபவித்து வருகிறேன். பல உண்மைகளை சொல்ல முடியாமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு வாழ்ந்தேன். சிலரை காப்பாற்றவே நான் அமைதியாக இருந்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மீடியா குறித்து பேசும்போது பாலா தனது வேதனையை மறைக்கவில்லை. "நல்ல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் வெறும் வியூஸ்க்காக பொய்யான விஷயங்களை பெரிதாக்குகிறார்கள். தொடர்ந்து என்னைச் சுற்றி வரும் வழக்குகள், சர்ச்சைகள், தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் என நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பேச்சு, எவ்வளவு நாட்களாக உள்ளுக்குள் அழுத்தத்தை சுமந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.
சட்டம் இருக்கிறதா?
வீடியோவில் ஒரு கட்டத்தில் பாலா, "இந்த உலகத்தில் சட்டம் இருக்கிறதா? உண்மைக்கு மதிப்பு இருக்கிறதா? இனிமேல் யாராவது என்னைப்பற்றி தவறாக பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து பிரஸ் மீட் வைத்து உண்மையை சொல்லுவேன்" என்று எச்சரித்துள்ளார். இதிலிருந்து அவர் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

யார் இந்த நடிகர் பாலா?
பலருக்கு பாலா என்றால் வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த முகம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு முன்பே தமிழில் அன்பு, அப்பா அம்மா செல்லம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான பாலா, மலையாள சினிமாவிலும் தனக்கென இடம்பிடித்தவர். ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் புயல்
பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அதன்பிறகு வாழ்க்கையில் புதிய அத்தியாயமாக மீண்டும் திருமணம் செய்து கொண்டாலும், பழைய பிரச்சனைகள், வழக்குகள், குற்றச்சாட்டுகள் என சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.
ரசிகர்களை கலங்க வைத்த வீடியோ
திரையில் எப்போதும் தைரியமாக தோன்றும் ஒருவர், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு உடைந்து பேசுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"ஒரு மனிதனை நிம்மதியாக வாழ விடமாட்டீங்களா?", "இவ்வளவு வேதனை இருந்ததா?", "உடனே யாராவது அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு நடிகரின் பிரபல வாழ்க்கை வெளியே பிரகாசமாக தெரிந்தாலும், அதன் பின்னால் எவ்வளவு கண்ணீரும், மன அழுத்தமும் இருக்க முடியும் என்று பலரும் பேசி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?














Click it and Unblock the Notifications